விஜய்யை துணைக்கு அழைத்த குஷ்பு..! ஏன் தெரியுமா..? காரணம் இதோ..!

0
1481
vijay

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கி வந்த குஷ்பு பல முறை சர்ச்சையான கருத்துக்களை கூறி பிரச்சனையில் சிக்கி கொண்ட கதை ஏராளமாக இருக்கிறது. அதனால் தான் தனது பாதுகாப்பிற்காக காங்கிரஸ் கட்சியில் கூட இணைந்தார் என்று பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் தனக்கு வந்த சர்ச்சையில் நடிகர் விஜயின் பெயரை குறிப்பிட்டு மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை குஷ்பு.

Actress-Kushboo

சமீப ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்து வரும் குஷ்பு, அடிக்கடி பா.ஜா.கா தரப்பினரிடம் இருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் எந்த பதிவை போட்டாலும் பா.ஜா.கா தரப்பினர் சிலர் அவரின் மதத்தை குறிப்பிட்டே கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் குஷ்பு இஸ்லாமியர் என்று அவரது உண்மையான பெயர் “நக்கத் கான்” என்று தெரிவித்திருந்தனர்.

இதனால் குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு சுந்தர் என்ற பெயரை” குஷ்பு பா.ஜா.காவிற்காக நக்கத் கான்” என்று மாற்றிக்கொண்டார். இதையடுத்து அவருக்கு மீண்டும் மீண்டும் அவரது மதத்தை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தது. இதனால் கோவமடைந்த குஷ்பு சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

vijay actor

அதில் “நான் ஒரு இஸ்லாமியர், விஜய் ஒரு கிறித்துவர், தற்போது தான் பா.ஜா.கா வின் பக்தால்ஸ் நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா ஒரு கிறித்துவர் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டாள்கள் எப்போது நாம் அனைவரும் இந்தியர்கள் என்று உணர போகிறார்கள் ” என்று ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ” உங்களின் காங்கிரஸ் அரசியலை எங்கள் நடிகர் விஜயின் மீது திணிக்காதீர்ககள் ” என்று குஷ்புவை விமர்சித்து வருகின்றனர்.