ஆஸ்காருக்கு செல்லும் ராயன், வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு – உற்சாகத்தில் ரசிகர்கள்

0
396
- Advertisement -

தனுஷின் ராயன் படத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். தற்போது தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 50-ஆவது திரைப்படம் ‘ராயன்’. இந்த படத்தில் சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்து வருகிறது. அதோடு கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ‘ராயன்’ பட செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் சண்டை காட்சிகள் எல்லாம் பாலிவுட் படங்களில் வருவது போல் இருப்பதாக கூறுகின்றார்கள்.

- Advertisement -

ராயன் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்:

மேலும், ஒவ்வொரு நடிகர்களின் உடைய நடிப்பையும் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டியிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ராயன் படத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஆஸ்கர் விருதை வழங்கும் அகாடமி நிறுவனமாக இருப்பது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தினுடைய திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குவியும் வாழ்த்துக்கள்:

இதை ராயன் படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதனால் படத்தினுடைய இயக்குனர், நடிகருமான தனுஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்குமே சந்தோசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தனுஷின் முயற்சிக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை பார்த்து பலருமே பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ராயன் படம்:

படத்தில் ஹீரோ காத்தவராயன் பாஸ்ட் புட் ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு தம்பிகள், தங்கை இருக்கிறார்கள். காத்தவராயன் அண்ணனாக மட்டுமில்லாமல் ஒரு அப்பாவாகவும் தன் இரண்டு தம்பிகளையும், தங்கையும் பார்த்து வருகிறார். இதற்கிடையில் இவர் தன்னுடைய தங்கையை எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது தம்பி அடிக்கடி குடித்துவிட்டு ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து வருகிறார்.

படத்தின் கதை:

அப்போது ஏரியாவில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவருடைய மகன் கொல்லப்படுகிறார். அந்த பிரச்சனையில் காத்தவராயன் தம்பி சிக்கி கொள்கிறார். இதற்கு பழி தீர்க்க அந்த மொத்த கும்பலும் ஹீரோ தம்பியை கொலை செய்ய பார்க்கிறது. அதற்கு முன்பே ராயன் அந்த கும்பலை மொத்தமாக முடித்து விடுகிறார். கடைசியில் காத்தவராயன் எடுத்த கத்தி எங்கு கொண்டு போய் நிறுத்தியது? இறுதியில் அவர் என்ன செய்தார்? இதனால் காத்தவராயன் குடும்பத்தின் நிலை என்ன? அவருடைய தங்கைக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்தாரா? என்பதே படத்தினுடைய மீதி கதை.

Advertisement