நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் கடைசி எபிசொட் கொண்டாட்டத்தில் முன்னாள் நடிகை ரக்ஷிதா கலந்துகொண்டு இருக்கிறார். சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார்.
இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்து வந்தார். இவர்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், பல திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
இதையும் பாருங்க : ஒரு படம் எடுத்துட்டு ஏன்டா ஓவரா ஆடுறீங்க? ஆவேசமாக பேசிய இயக்குனர் சுந்தர் சி – இது தான் காரணம்
சீரியலில் இருந்து விலகிய ரக்ஷிதா :
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ரக்ஷிதா விலகுவதாக அறிவித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர் ‘என்னை விரும்பும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் என்னை பின் தொடர்பவர்களுக்கு நன்றி. உங்களை வரவேற்கிறேன். நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலிருந்து இனி நான் இல்லை. நான் சீரியலில் இல்லை என்பது உங்களில் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
தொடரில் எனக்கு மதிப்பில்லை :
ஆனால், சில சூழ்நிலை காரணத்தினால் தான் என்னால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. அதனால் தயவு செய்து இந்த முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றம் தந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், பல நேரங்களில் மதிப்பற்றவளாக நான் உணர்ந்தேன். இந்தத் தொடரில் எனக்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து தான் இந்தத் தொடரில் இனி நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன். நான் இந்த தொடரில் இருக்கிறேனா? இல்லையா? என்று எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் நான் இந்த முடிவை எடுத்தேன்.
ரக்ஷிதா சென்ற பின் NINI :
அதனால் பெரிதாக யாரும் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும், நாம் நமக்கு இருக்கும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவோம். வழக்கம் போல் நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு உங்களுடைய ஆதரவை தாருங்கள்.எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் என்று அவர் பதிவிட்டு இருந்தார். ரஷிதா இருந்த வரை இந்த சீரியல் விறுவிறுப்பாக தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால், அவர் சென்ற பிறகு இந்த தொடரை ஜவ்வாக இழுத்தனர்.இதனால் இந்த தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கு மிகுந்த சலிப்பை ஏற்படுத்தி இருந்தது.
ரக்ஷிதா காட்டிய பெருந்தன்மை :
இப்படி ஒரு நிலையில் இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்ததையொட்டி சீரியல் குழு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர். இந்த கொண்டாட்டத்தில் ரக்ஷிதாவும் பங்கேற்று இருந்தார். அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் ரக்ஷிதா ‘முடிவு ஒரு புதிய தொடக்கம் என்கிறார்கள்….. எனவே இது முழு அணிக்கும் ஒரு அழகான தொடக்கமாக இருக்கட்டும்’ என்று பதிவிட்டுள்ளார். என்னதான் சீரியல் குழு அவரை அவமதித்தாலும் பெருந்தன்மையுடன் இந்த கொண்டாடத்தில் ரக்ஷிதா கலந்துகொண்டு இருப்பது ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.