நீ தான் இந்த சமுதாயத்திற்கு தேவை… சர்கார் இசை வெளியீட்டு விழாவில் அடித்து சொன்ன பிரபல நடிகர்

0
290
Vijay

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய நடிகர் ராதாரவின் பேச்சு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

sarkar

இந்த விழாவில் நடிகர் விஜய் குறித்து ராதாரவி பேசுகையில், நான் எப்போதும் என் மகன் என்று நினைத்து தான் அவரிடம் பேசுவேன்.உங்களின் தளபதியாக இருக்க கூடிய என்னுடை அன்பு விஜிமாவிற்கு வணக்கம் என்று தனது பேச்சை துவங்கினார்.

பின்னர், விஜய்யின் முதல் படத்தில் நான் தான் அவருடைய அப்பாவாக நடித்திருந்தேன். ஆனால், அதனை இப்போதும் மறக்காமல் ஒரு புத்தகத்தில் நடிகர் விஜய் கூறியதாவது… “நான் இந்த அளவிற்கு நடிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ராதாரவி தான்” என்பதை நன்றியோடு சொன்ன ஒரே நடிகர் விஜய் தான் என்று கூறினார்.

radharavi

மேலும், இதுபோன்ற இசை வெளியிட்டு விழாவை நான் பார்த்ததே இல்லை என்று கூறிய நடிகர் ராதாரவி. சகோதரர் விஜய் அவர்கள் சமூதாயத்திற்கு செய்யும் தொண்டுகலே அவரை வளர்த்து விடும். அவரது வளர்ச்சியை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து பார்த்து நான் மகிழ்கிறேன் என்று கூறிய ராதாரவி, விஜயை பார்த்து ‘நீ சமுதாயத்திற்கு தேவை’ என்றதும் அரங்கமே அதிர்ந்தது.