ராதிகா என் அம்மா கிடையாது. நான் அப்படி கூப்படவும் மாட்டேன். வரலக்ஷ்மி ஓபன் டாலக்.

0
111405
varalakshmi
- Advertisement -

தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழில் இயக்கத்தில் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் நடிகை ராதிகா. இதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் தொடங்கி விஜய்,சூர்யா, விஷால்,விஜய் சேதுபதி என தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சரத்குமார் அவர்களை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

-விளம்பரம்-
Image result for sarathkumar family
வரலக்ஷ்மி சரத்குமார் தனது அம்மாவுடன்

அதோடு சரத்குமார் அவர்களின் முதல் மனைவியின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து உள்ளார். மேலும், விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.மேலும், இயக்குனர் மனோஜ்குமார் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெல்வெட் நகரம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதையும் பாருங்க : யாரு அம்மன் வேடம் போடனும்கிற கூறுபாடு இல்லாம போச்சு இந்த கூமுட்டைகளுக்கு-கிண்டல் செய்தவருக்கு ஆர் ஜே பாலாஜியின் பதில்.

- Advertisement -

இந்த படம் திரில்லர் பாணியில் அமைந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க பெண்ணை மையமாக மையப்படுத்திய கதை. பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் முதன் முதலாக வரலக்ஷ்மி நடித்து உள்ளார். இந்த படத்தில் வரலட்சுமியுடன் கஸ்தூரி, ரமேஷ் திலக், திரைப்படப் பாடகி மாளவிகா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். கூடிய விரைவில் இந்த படம் வெளிவரும் என்று அறிவித்து உள்ளார்கள். இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் வரலட்சுமியும், இயக்குனர் மனோஜ்குமாரும் பேட்டியளித்திருந்தார்கள். அதில் தொகுப்பாளர் சோசியல் மீடியாவில் உங்கள் குடும்பத்தை குறித்து ரொம்ப கஷ்டமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இது குறித்து சொல்லுங்கள் என்று கேட்டார்.

வீடியோவில் 4 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அதற்கு வரலக்ஷ்மி கூறியது, மக்கள் பல கருத்துக்களை சொல்லி கொண்டு தான் இருப்பார்கள். என்னை நிறைய பேர் எப்படி நீங்கள் ராதிகாவை ஆன்ட்டி என்று கூப்பிடுவீர்கள்? என்று கேட்டார்கள். ராதிகா ஒன்னும் என்னுடைய தாய் கிடையாது. அவர்கள் என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி. தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். அனைவருக்குமே ஒரே ஒரு தாய் மட்டும் தான். அதனால் ராதிகா அவர்கள் என்னுடைய அம்மா கிடையாது. அவர் எனக்கு ஆண்டி தான். அவர்களுக்கு என்னுடைய தந்தை சரத்குமார் அவர்களுக்கு இணையாக மரியாதை கொடுத்து வருகிறேன். ஒரு அப்பாவாக சரத்குமார் அவர்களும் தன்னுடைய கடமையை செய்து உள்ளார். ஒரு சில பேருக்கு வேலை வெட்டியே இல்ல. அவங்க வேலையே இந்த மாதிரி குழைப்பது தான். அவங்களுக்கு வேற வேலை வெட்டி இருந்திருந்தா இதெல்லாம் எதுக்கு பண்றாங்க என்று அதிரடியாக கூறினார்.

Advertisement