யாரு அம்மன் வேடம் போடனும்கிற கூறுபாடு இல்லாம போச்சு இந்த கூமுட்டைகளுக்கு-கிண்டல் செய்தவருக்கு ஆர் ஜே பாலாஜியின் பதில்.

0
51023
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
https://twitter.com/DurgaiRaj19/status/1234007030949711872

பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நயன் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : மூன்று பேர் அந்த படத்துல பாடினாங்க, எப்படி சிம்ரன் உங்கள குரல கண்டுபிடிச்சாங்கன்னு கேட்ட – காமெடி நடிகர் பேட்டி.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது.அதில் நடிகை நயன்தாரா படு பக்தி மயமாக அம்மன் வேடத்தில் காட்சி அளித்திருந்தார். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான ஆதரவுகள் வந்த நிலையில் ரசிகர் ஒருவர் இந்த போஸ்டரை கண்டு ‘ யாரு அம்மன் வேடம் போடனும்கிற கூறுபாடு இல்லாம போச்சு இந்த கூமுட்டைகளுக்கு’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஆர்ஜே பாலாஜி, துர்கை ராஜ் உங்க பேர்ல இருக்கற கடவுள் தான் உங்களூக்கு நல்ல புத்திய கொடுக்கனும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார். மேலும்,அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறாராம் நடிகை நயன். இந்த விஷயம் உண்மையா பொய்யா என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில் இதனை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் போது உறுதி செய்த பாலாஜி , நயன்தாரா உண்மையாக தான் விரதமிருந்து இந்த படத்தில் நடித்து வருகிறார் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement