‘வக்கீல் கேட்டும் இறுதி வரை அதை சொன்னதே இல்லயாம்’ எம் ஆர் ராதாவின் பிறந்தநாளில் ராதிகா பதிவு.

0
27721
m-r-radha
- Advertisement -

தமிழ் திரையுலகில் மிகப் பிரபல நடிகராக வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா. அவரது வாரிசுகள் தான் பிரபல நடிகர் ராதாரவி மற்றும் பிரபல நடிகை ராதிகா சரத்குமார். நடிகர் எம்.ஆர்.ராதா அவரது படங்களில் பேசும் வசனங்கள் மற்றும் அவர் பேசும் ஸ்டைல் தான் இன்றளவும் மக்கள் அவரை நினைவில் வைத்திருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடிகர் எம்.ஆர்.ராதா பிறந்த தினம். எம்.ஆர்.ராதா பிறந்த தினம் என்பதால், அவரது மகளும், பிரபல நடிகையுமான ராதிகா சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பாவை பற்றி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த பதிவில் “இன்று (ஏப்ரல் 14-ஆம் தேதி) ஒரு ராக் ஸ்டாரின் பிறந்த நாள். அவர் தான் எம்.ஆர். ராதா. அவருக்கு என சில தனி கொள்கைகளுடன் வாழ்ந்தவர். வழக்கறிஞர்கள் எம்.ஆர்.ராதாவை நீதி மன்றத்தில் பொய் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அப்போது, நன்றாக சிரித்து விட்டு. தயவு செய்து என்னிடம் அதை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள்.

இதையும் பாருங்க : இரண்டாம் கணவருடன் முதல் திருமண நாளை கொண்டாடும் பூஜா. பீச் புகைப்படத்துடன் வாழ்த்து சொன்ன கணவர்.

- Advertisement -

எனது வாழ்வில் இதுவரை நான் செய்யாத ஒரு செயல் அது. எது நடந்தாலும் பரவாயில்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன்” என்று சொன்னார் என ராதிகா குறிப்பிட்டிருக்கிறார் இப்படி இரு பதிவை போட்டதுடன், எம்.ஆர். ராதாவின் ஒரு புகைப்படத்தையும் ராதிகா ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.

நடிகை ராதிகாவின் இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேத்தி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அவர் தான் ரயனே மிதுன். இவர் நடிகை ராதிகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தான் இவருக்கு இரண்டாவது குழந்தை கூட பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : ஈக்காட்டுதாங்களில் இருக்கும் RR பிரியாணி ஓட்டலை நடத்தும் பிரபல நடிகர். தொழிலாளிகளுக்கு இலவச பிரியாணியாம்.

-விளம்பரம்-

அதே போல ரெயன்மிதுன் ட்விட்டரில் “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாத்தா… நானும் எனது குழந்தைகளும் உங்களை சந்தித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்… இருப்பினும் நான் உங்களை பற்றி எல்லாவற்றையும் அவர்களிடம் கூறி வருகிறேன்” என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேத்தி ரயனே மிதுன் ட்விட்டரில் போட்ட ஸ்டேட்டஸை பார்த்த பல ரசிகர்கள் “தாத்தா எப்போதும் உங்களை பார்த்துக் கொண்டே தான் இருப்பார்.. ஆகையால், ஒரு போதும் கவலை படாதீர்கள்” என்று ஆறுதலாக ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர்.

Advertisement