இரண்டாம் கணவருடன் முதல் திருமண நாளை கொண்டாடும் பூஜா. பீச் புகைப்படத்துடன் வாழ்த்து சொன்ன கணவர்.

0
46820
pooja
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பூஜா ராமச்சந்திரனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-

‘SS மியூசிக்’ என்ற டிவி சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை துவங்கினார் பூஜா ராமச்சந்திரன். அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தார் பூஜா ராமச்சந்திரன். அது தான் ‘காஞ்சனா’ என்ற சீரியல். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பூஜா நடித்த இந்த ‘காஞ்சனா’ எனும் ஹாரர் த்ரில்லர் ஜானர் சீரியல் ஒளிபரப்பானது.

இதையும் பாருங்க : பாய்ஸ் படத்திற்கு முன்பாகவே மாதவனின் இந்த படத்தில் பஸ் பயணியாக முகம் காட்டியுள்ள சித்தார்த்.

- Advertisement -

அதன் பிறகு சின்னத் திரையுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பூஜா ராமச்சந்திரன், அடுத்ததாக வெள்ளித் திரையிலும் நுழைந்தார். தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா 2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் பூஜா ராமச்சந்திரன்.

2010-ஆம் ஆண்டு ‘SS மியூசிக்’ புகழ் VJ க்ரேயிக்கை திருமணம் செய்து கொண்டார் நடிகை பூஜா ராமச்சந்திரன். பின்னர் 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்ட பூஜா ராமச்சந்திரன், நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-

தற்போது, இருவரும் நேற்று (ஏப்ரல் 15-ஆம் தேதி) தங்களது முதல் ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக இருவரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதோடு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அப்புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதையும் பாருங்க : ஈக்காட்டுதாங்களில் இருக்கும் RR பிரியாணி ஓட்டலை நடத்தும் பிரபல நடிகர். தொழிலாளிகளுக்கு இலவச பிரியாணியாம்.

இப்போது ‘அந்தகாரம்’ என்ற திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை பூஜா ராமச்சந்திரன், இந்த படத்தில் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மிஸா கோஷல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வி.விக்னராஜன் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தினை பிரபல இயக்குநர் அட்லி தயாரித்திருக்கிறார்.

Advertisement