பிரபல நடிகையான ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெறியும். நடிகர் எம் ஆர் ராதாவிற்கு சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் மற்றும் கீதா என்று 4 மனைவிகள் இருந்தனர்.அதில் 4வது மனைவி திருமதி கீதாவிற்கு பிறந்த மகள் தான் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷா.
நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப்பை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஒரே ஆண்டில் இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ரிச்சர்ட் என்ற இங்கிலாந்து நாட்டைசேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படியுங்க : பஞ்ச பூதம் என்று ஆர்த்தி கொடுத்த போஸ்.! பங்கமாக கலாய்த்து வரும் ட்விட்டர் வாசிகள்.!
ராதிகா ரிச்சர்ட்டை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே அவருடன் உறவில் இருந்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரது திருமண பந்தலில் தான் இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தை பிறந்தது. இரண்டு ஆண்டுகள் தனது இரண்டாவது கணவர் ரிச்சர்ட்டுடன் வாழ்ந்து வந்த ராதிகா பின்னர் 1992 ஆம் ஆண்டு ரிச்சர்ட்டை விவாகரத்து செய்து விட்டார்.
இந்நிலையில் பிரதாப்பிற்கு பிறந்த ரேயானுக்கு குழந்தை பிறந்துள்ளது. இன்று அந்த குழந்தைக்கு முதல் பிறந்தநாளாம். இதையொட்டி ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பேரனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனை கண்ட ட்விட்டர் வாசி ஒருவர் , சரத் குமாரின் இரண்டாவது மனைவி ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகளின் குழந்தைக்கு தாத்தாவாணர் சரத்குமார் என்று மோசமாக கமன்ட் செய்திருந்தார். இதை பார்த்து செம்ம கடுப்பான ராதிகாவின் மகள் ரேயான், அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளது “இது என்னுடைய உலகம். எங்களுடைய வாழ்க்கை. என்னுடைய தந்தை ஆசிர்வதிக்கப்பட்டவர் எனவே அவருக்கு அருமையான மனைவி, நான்கு குழந்தைகள், பேரன் என அவரை நேசிக்கும் ஒரு குடும்பம் அவருக்கு கிடைத்திருக்கிறது என கூறியுள்ளார்.