கையில் சிகரெட்டுடன் நடிகை ராதிகா – புகைப்படத்தை கண்டு வியந்த ரசிகர்கள்.

0
1083
Radhika-Sarathkumar
- Advertisement -

விஜய் ஆண்டனி படத்தில் ராதிகா நடித்து இருக்கும் ரோல் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தான் அறிமுகமானார். பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார் . 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். விஜய் ஆண்டனி. இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். அதோடு இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : Stamp Duty மட்டுமே 7.13 கோடி, ஒரு சதுர அடி 1.05 லட்சம் – அரபிக் கடல் அருகே ரன்வீர் தீபிகா கட்டி வரும் வீட்டின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா ?

விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள்:

இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மழை பிடிக்காத மனிதன், காக்கி, தமிழரசன் உட்பட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜய் ஆண்டனி- அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அக்சரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மூடர்கூடம் நவீன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

கொலை படம்:

இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் கொலை. இந்த படம் த்ரில்லர் வகையில் உருவாகி வருகிறது. இந்த படத்தை விடியும் முன் பட இயக்குனர் பாலாஜி குமார் இயக்குகிறார். இந்த படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

கொலை படத்தின் புதிய அப்டேட்:

இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் தி பாஸ் என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறார். அது குறிப்பிட்ட போஸ்டரை தான் பட குழு வெளியிட்டுள்ளது. அதில் ராதிகா கையில் சிகரெட்டுடன் பயங்கரமாக பாஸ் கொடுத்திருக்கிறார்.

ராதிகா திரைப்பயணம்:

தற்போது ராதிகாவின் இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ராதிகா. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். மேலும், இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.

Advertisement