“கலைஞர்” என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வைத்தது என் அப்பா தான்.! பிரபல நடிகை .!

0
2528
karunanidhi
- Advertisement -

தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுல்லது. அவரது மறைவையொட்டி பல்வேறு பிரபலங்களும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். அத்தொடு அவருடன் ஏற்பட்ட பல நிகழ்வுகளை பல்வேறு பிரபலங்களும் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Radhikka

- Advertisement -

திமுக தலைவர் கருணாநிதி என்ற பெயரை விட ‘கலைஞர்’ என்ற பெயரை தான் தமிழக மக்கள் அதிகம் கேட்டிருப்பார்கள். ஆனால், அவருக்கு ‘கலைஞர்’ என்று பெயர் வர காரணம் தனது அப்பா தான் என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும், மறைந்த நடிகர் எம் ஆர் ராதா அவர்களுக்கும் ஒரு ஆழமான பந்தம் இருந்ததுள்ளது .பல்வேறு திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்துள்ள கலைஞர் அவர்கள் மணிமகுடம், உதயசூரியன், தூக்குமேடை சிலப்பதிகாரம் போன்ற பல்வேறு மேடை நாடகங்களையும் அரங்கேறியுள்ளார்.

இதில் தூக்குமேடை என்ற நாடகத்தில் கலைஞர் அவர்களும் நடிகர் ராதாரவி அவர்களும் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். அப்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை நடிகையும், எம் ஆர் ராதாவின் மகளுமான ராதிகா சரத் குமார் நினைவு கூர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

radhika_sarathkumar

சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள நடிகை ராதிகா சரத் குமார் ‘கருணாநிதி அவர்களை நாங்கள் எப்போதும் அப்பா என்று தான் அழைப்போம். அவர் என் குடும்ப நபரை போல தான் நாங்கள் நினைத்திருந்தோம். என்னுடைய அப்பாவும்(எம் ஆர் ராதா), கலைஞரும் சேர்ந்து ‘தூக்கு மேடை’ என்ற நாடக்கத்தில் பணியாற்றினார்கள்.

அப்போது கலைஞர் திறமையை பார்த்து, என் அப்பா தான் அவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டத்தை அளித்தார். இப்போது கலைஞர் ஐய்யா இல்லாத ஒரு அரசியலை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அவரது தமிழ் புலமை மிகவும் சிறப்பானது. அவர் எப்போதும் தமிழுக்கும்,. தமிழ் உணவர்விற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்’ இன்று உணர்ச்சிபொங்க பேசியுள்ளார் நடிகை ராதிகா.

Advertisement