தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி.

இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். கடந்த வாரம் வெளியாகிருக்கும் இந்த படம் தாய் கிழவி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
தாய் கிழவி படம்:
இந்நிலையில் தாய் கிழவி படத்தினுடைய வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் நாளிலிருந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரே வாரத்தில் தாய் கிழவி படம் 25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஒரு பெண் கதாபாத்திரம் அதுவும் ஒரு வயதான முதியவர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்திருப்பது பெரிய சாதனை.

படத்தின் வசூல்:
அதோடு தமிழ் சினிமாவில் 75 ஆண்டுகளைக் கடந்தும் 60 வயதுக்கு மேற்பட்ட நடிகை ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது இதுவே முதல்முறை. ராதிகாவின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. படத்தில் ராதிகா அவர்கள் கருமாத்தூர் கிராமத்தில் பவுனுதாயாக வசித்து வருகிறார். இவர் அசைக்க முடியாத அதிகாரம், யாருக்கும் அஞ்சாத சுபாவம், கையில் சுருட்டு, வெறித்தனமாக பேசும் வசனங்கள் என்று ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இவர் வட்டி தொழில் செய்கிறார்.

படத்தின் கதை:
தன்னுடைய பிள்ளைகளை தன் நிழலில் வளர விடாமல் இருக்கும் இரும்பு மனுசி. கொடுத்த கடனை கரராக கேட்க கூடியவர். அவர் எப்போ இறப்பார் என்று ஊர் மக்கள் மட்டும் இல்லாமல் தங்களுடைய பிள்ளைகளுமே நினைக்கிறார்கள். திடீரென்று ஒரு நாள் பவுனுதாயி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். பின் நகை கடை ஓனர் மூலம் ராதிகா 160 பவுன் நகை வாங்கிய விஷயம் மகன்களுக்கு தெரிய வருகிறது. பின் ராதிகாவின் உயிரையுமே காப்பாற்ற போராடுகிறார்கள். ராதிகாவின் மகன்கள் நினைத்தது போல நடந்ததா? ராதிகா உயிர் பிழைத்தாரா? அவருடைய நகைகளை மகன்கள் கைப்பற்றினார்களா?
என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை.






