கிரிக்கெட் சூதாட்ட பிரச்சனையில் சிக்கிய ராதிகாவின் மருமகன். யாருனு பாருங்க.

0
86756
radhika
- Advertisement -

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்து விளையாடி உள்ளார்கள் என்று புகார் எழுந்து உள்ளது. மேலும், அதில் மற்றும் ஓரு இந்திய பந்து வீச்சாளர் வந்து உள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வந்து உள்ளது. மேலும், தற்போது இந்த நியூஸ் தான் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் சமீபத்தில் தான் கர்நாடக மாநிலத்தில் டி20 ப்ரீமியர் லீக் நடந்து முடிந்தது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டி20 தொடரில் வீரர்கள் அனைவரும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்து உள்ளது. மேலும், இது குறித்து பல விசாரணைகள் எழுந்தன. இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-
அபிமன்யூ – ரேயான்

இதனை அடுத்து அந்த வழக்கை கர்நாடக போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தார்கள். மேலும்,கர்நாடக வீரர்களான ஜிஎம் கவுதம் மற்றும் அப்ரார் காஸி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் தற்போது மற்றும் ஓரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் இந்த ஊழல் பிரச்சினையில் மாட்டி உள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த மேட்ச் பிக்சிங் ஊழல் பிரச்சினையில் இவருடன் ஒரு பொண்ணும் சேர்ந்து செயல்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்கள். மேலும் அந்தப் பெண் யாரென்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து அந்த நபர் யார் என்று பார்த்தால்.. இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அபிமன்யு மீதுன் தான். மேலும்,இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.

- Advertisement -

மேலும், அபிமன்யு மிதுன் அவர்கள் இந்திய அணிக்காக இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி ஒன்றில் கூட கலந்து கொண்டு உள்ளார். மேலும் அபிமன்யு மீதுன் மீது கர்நாடக போலீஸ் வட்டாரம் வழக்கு பதிவு செய்து உள்ளார்கள். மேலும், அதை கர்நாடக போலீஸ் உறுதியும் செய்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அபிமன்யு மிதுன் யார் என்றால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமாரின் மருமகன் என்பது தெரிய வந்து உள்ளது. அதாவது நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் தான் ரயான்.

தனது மனைவி குடும்பத்துடன் அபிமன்யூ

மேலும், நடிகை ராதிகா அவர்கள் சரத்குமாரின் இரண்டாவது மனைவிஆவர். அது மட்டும் இல்லாமல் நடிகை ராதிகாவின் இரண்டாம் கணவர் ரிச்சர்ட்டுக்கு பிறந்தவர் தான் ரயான். ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் பிறந்தது ஒரு மகன் மகன் மட்டும் தான். அதோடு சரத்குமார்– ராதிகாவின் மகள் ரயான்க்கும் கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுக்கும் திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-
Image result for Abhimanyu-mithun-indulge-in-match-fixing"
அபிமன்யூ மிதுன்

மேலும், கர்நாடக போலீஸ் தரப்பிலிருந்து இது குறித்து விசாரித்த தகவலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிய வந்து உள்ளது. மேலும், கர்நாடக பிரீமியர் லீக் மேட்ச் பிக்சிங்கில் தற்போது மற்றும் ஓரு கிரிக்கெட் வீரர் இந்த ஊழல் பிரச்சினையில் உள்ளார் என்பது தெரிந்தவுடன் கிரிக்கெட் வட்டாரத்தில் பயங்கர பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் உறைந்து போய் உள்ளார்கள்.

Advertisement