தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சரத்குமார் அவர்கள் நடிகர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பல படங்களிலும் நடித்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார்.
நடிகர் சரத்குமார் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவரை கடந்த 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா. இதில் வரலக்ஷ்மி “போடா போடி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதே போல சரத்குமாரின் இரண்டாம் மனைவி தான் நடிகை ராதிகா.
பட்டம்பெற்ற மகன் :
இது அனைவருக்கும் தெரிந்தது தான். சரத்குமார் நடிகை ராதிகாவை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகனும் பிறந்தார். இப்படி ஒரு நிலையில் ராகுல் சமீபத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனையடுத்து பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட சரத்குமார் மற்றும் ராதிகா இது குறித்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
#Radhikasarathkumar send off her son pic.twitter.com/TrheIvqq1o
— chettyrajubhai (@chettyrajubhai) April 21, 2023
ராதிகா பெருமிதம் :
இதுகுறித்து பதிவிட்ட ராதிகா ‘’யுனிடெட் வேர்ல்ட் காலேஜ் ஆப் சவுத் ஈஸ்ட் ஆசியா’ என்ற கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பை முடித்த தங்கள் மகனும் பட்டம் பெற்றதை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஒரு சிறுவனாக பள்ளியில் சேர்ந்ததிலிருந்து பொறுப்பான வயது வந்த இளைஞராக மாறியதை நினைத்து நானும் சரத்குமாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்ராகுலின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் எங்கள் இருவருக்கும் பெருமை.
கண்ணீருடன் வழியனுப்பிய ராதிகா :
அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் சிங்கப்பூரில் படிக்கும் தனது மகனை வழி அனுப்புவதற்காக ஏர் போர்ட் சென்ற ராதிகா மகனை பிரிய முடியாமல் அவரை கட்டி அனைத்து அழுது வழி அனுப்பியுள்ளார். இது ஒருபுறம் இருக்க ராகுல் ஏற்கனவே சினிமாவில் கூட களமிறங்கி இருந்தார், அதுவும் பாடகராக. ஸ்ரீகாந்த் தேவா இசையில் ராகுல் ரா சன் டேக் ஆப் என்ற rap பாடலை பாடி இருந்தார் ராகுல். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பாடலை ராகுல் தான் எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.