வாவ், சூப்பர் – தனது மகள் ஐஸ்வர்யா கட்டிய பிரம்மாண்ட வீட்டை பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார்

0
521
Rajini
- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய வீடு குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது.

-விளம்பரம்-

இதை அடுத்தும் இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதனிடையே ரஜினி அவர்கள் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு மகள்களுமே சினிமா துறையில் கலக்கிக் கொண்டு வருகிறார்கள். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து இவர் வை ராஜா வை போன்ற சில படங்களை எல்லாம் இயக்கி இருக்கிறார். பின் இவர் தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி 18 ஆண்டு காலமாக சேர்ந்து வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா- தனுஷ் இருவரும் கடந்த ஆண்டு பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருந்தது.

லால் சலாம் படம்:

இது குறித்து பலருமே அறிவுரை சொன்னார்கள். ஆனால், இருவரும் ஒன்று சேர்ந்த வழி இல்லை. இதனை அடுத்து பிரிவிற்கு பிறகு இருவருமே தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஐஸ்வர்யா அவர்கள் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இவர் 7 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின் லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் இவர் கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா அடுத்த படம்:

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிருக்கிறார். மேலும், இந்த படத்தில் ரஜினி அவர்கள் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசூலும் இல்லாமல் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா புது வீடு:

தற்போது இவர் நடிகர் சித்தார்த்தை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய வீடு குறித்த வீடியோ தான் வெளியாகியிருக்கிறது. அதாவது, தற்போது இவர் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டினுடைய உள்புற வேலைகள் எல்லாம் முடிந்திருக்கிறது. ஆகவே, இந்த வீட்டை இவருடைய தந்தை ரஜினிகாந்த், தாய் லதா மற்றும் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement