காவி நிறத்தில் மாஸ்க் அணிந்த எஸ் வி சேகர். பங்கமாக கலாய்த்த விஜய் பட இயக்குனர்.

0
38521
svsekar
- Advertisement -

தமிழ் சினிமாவில் ‘முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் மகேந்திரன். இவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘பேட்ட’, ‘தளபதி’ விஜய்யின் ‘தெறி’ என சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். இவரது மகன் தான் ஜான் மகேந்திரன். இவரும் பிரபல இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

2005-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘சச்சின்’. இது தான் ஜான் மகேந்திரன் தமிழில் இயக்கிய முதல் திரைப்படமாம். இந்த படத்தில் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஜெனிலியா நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : அஜித் பட நடிகைக்கு கிடைத்த தண்டனை – ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ.

- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், பிரபல நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் மாஸ்க் அணிந்திருந்தார்.

இதையும் பாருங்க : மொட்டையடித்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை – காரணத்தை கேட்டால் ஷாக்காவீங்க.

-விளம்பரம்-

மேலும், ‘கொரோனா’ வைரஸ் பரவி வருவதால் அனைவரும் மாஸ்க் அணியுங்கள் என்று எஸ்.வி.சேகர் ட்விட்டரில் ஒரு ஸ்டேட்டஸும் போட்டிருந்தார். எஸ்.வி.சேகர் சஃப்ரான் கலர் மாஸ்க் அணிந்திருந்ததால், இயக்குநர் ஜான் மகேந்திரன் “கிஃப்ட் ஃப்ரம் துபாயா?” என்று அவரை கேலி செய்யும் வகையில் ஒரு ட்வீட் போட்டிருந்தார். இதற்கு எஸ்.வி.சேகர் “இப்படி ஒரு ட்வீட்டை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ஜான் மகேந்திரன் “நாங்களும் உங்களிடம் இருந்து உழைக்கும் பெண்களை பற்றிய ஒரு சீப்பான கமெண்ட்டை எதிர்பார்க்கவில்லை சார்” என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் ஜான் மகேந்திரனிடம் “ஜான் அண்ணா.. என்ன இப்படி சேகரை பொசுக்குன்னு அடிச்சுட்டீங்க” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஜான் மகேந்திரன் “நான் அவருடைய ரசிகனாகத் தான் இருந்தேன். எப்போது உழைக்கும் பெண்களை கொச்சை படுத்தி பேசினாரோ. அப்போதே அவர் மீது இருந்த மரியாதையே போய் விட்டது” என்று பதிவிட்டிருந்தார். எஸ்.வி.சேகர் 2018-யில் ஃபேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸின் சர்ச்சையை மனதில் கொண்டு தான் ஜான் மகேந்திரன் இவ்வாறு பேசியிருக்கிறாராம்.

Advertisement