சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் தண்ணீர் கேட்டு வந்த மாணவர் மீது தாக்குதல். லாரன்ஸ் மன்னிப்பு பதிவு.

0
1140
Ragahava
- Advertisement -

சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கல்லூரி மாணவரை பவுன்சர்கள் தாக்கி இருக்கும் சம்பவம் தொடர்பாக ராகவா லாரன்ஸ் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது. இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் நண்பராக இளைய திலகம் பிரபுக்கு நடித்திருப்பார்.

-விளம்பரம்-

அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சந்திரமுகியாக முக்கிய கதாபத்திரத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர்களுடன் இந்த படத்தில் நயன்தாரா, வடிவேல் ,நாசர், கே ஆர் விஜயா என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை சிவாஜி புரொடக்சன் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இப்படம் 1999 இல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

- Advertisement -

சந்திரமுகி படம்:

மேலும், முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. சந்திரமுகி 2 படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுபாஷ் சந்திரன் அவர்கள் தயாரிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் சந்திரமுகி 2 இயக்குகிறார். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை போல இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். இதில் ராகவா லாரான்ஸ் வேட்டையன் ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் கங்கனா ரனாவத், ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

சந்திரமுகி 2 படம்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த விழா பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்று இருக்கிறது. அப்போது விழா நடைபெற்ற இடத்தில் மாணவர் ஒருவர் பட குழு செல்லும் நுழைவு வாயிலில் செல்ல முயன்றதால் பவுன்சர்கள் தாக்குதல் நடத்தி இருந்தார்கள்.

-விளம்பரம்-

மாணவர் தாக்குதல் வீடியோ:

இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அனைவருக்கும் வணக்கம், எங்களின் சந்திரமுகி-2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பவுன்சர் ஒருவர் கல்லூரி மாணவனுடன் சண்டையில் ஈடுபட்ட அசம்பாவித சம்பவத்தை நான் அறிந்தேன். முதலில் இந்த சம்பவம் அரங்கிற்கு வெளியே நடந்ததால் நானோ அல்லது ஏற்பாட்டாளர்களோ இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை எங்கள் மாணவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் மற்றும் அவர்கள் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

ராகவா லாரன்ஸ் பதிவு:

இது அனைவரும் அறிந்த உண்மை. அப்படிப்பட்ட நபராக இருப்பதால், இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எப்போதும் எதிரானவன். நாம் செல்லும் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது கண்டிப்பாக தவறு. குறிப்பாக மாணவராக இருக்கும் போது இது நடந்திருக்கவே கூடாது. அந்த நேரத்தில் நடந்ததற்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதுபோன்ற செயல்களில் இனிமேல் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement