இனிமேல் இப்படி தான் செய்யப்போறேன் – சிறுவனின் காலில் விழுந்த காரணம். லாரன்ஸ் வெளியிட்ட உருக்கமான வீடியோ.

0
269
lawrence
- Advertisement -

சிறுவன் காலில் ராகவா லாரன்ஸ் விழுந்ததற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் ருத்ரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ருத்ரன் படத்தின் வேலைகளை லாரன்ஸ் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதன் பின் ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘துர்கா’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. இந்த போஸ்டரை சிலர் விமர்சித்து இருந்தாலும் சிலர் நல்ல விதமாக கமெண்டுகளை போட்டு இருந்தார்கள். ராகவா லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதனை தொடர்ந்து இவர் 17 வருடங்கள் கழித்து உருவாகும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்கள்:

இவருடன் படத்தில் வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்ததாக கொடி புகழ் துரை செந்தில் குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் எழுதி இருக்கிறார். இப்படி ராகவா லாரன்ஸ் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல சமூக சேவைகளை செய்து கொண்டு இருக்கிறார். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார்.

லாரன்ஸின் சமூக சேவை:

இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் கூட இனி யாரும் என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம் என்று ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சிறுவனின் காலில் ராகவா லாரன்ஸ் விழுந்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து லாரன்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்! இனி நானாக யாருக்கு உதவி செய்தாலும் அவர்கள் என் காலில் விழக்கூடாது என்று கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்து தான் என் சேவையை செய்வேன்.

-விளம்பரம்-

லாரன்ஸின் அறிக்கை:

நீண்ட நாட்களாக எனக்குள் இந்த ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர காத்திருந்தேன். இன்று அதற்கான முதல் அடி எடுத்து வைத்திருக்கிறேன். பொதுவாகவே ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுந்து உதவி கேட்பதை நாம் எப்போதும் பார்த்திருக்கிறோம். அந்த பணக்காரகள் தங்களுக்கு உதவி செய்த பிறகும் அவர்கள் மீண்டும் அவ்வாரே செய்கிறார்கள். இதுபோன்ற சில சம்பவங்களால் மட்டும் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை. என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களுக்கும் இதற்கு காரணம் என்று சொல்லலாம். அவற்றை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மாற்றத்திற்கு காரணம்:

ஒரு குடும்பத்தினால் தங்கள் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு என்னிடம் வரும்போது என் கால்களில் விழுந்தனர். நான் விலகி சென்று உதவி செய்தேன். அந்த குழந்தை தன்னுடைய பெற்றோர்கள் என் காலில் விழுந்த உடனே அழ தொடங்கியது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக படும் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால், குழந்தைகளுக்கு முன்னால் எந்த அப்பாவும் ஹீரோவாக இருக்க விரும்புவார்கள். பிறகும் அந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை என் காலில் விழ வைக்கிறார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என நம்புபவன்.

அறிக்கையில் லாரன்ஸ் சொன்னது:

அதனால் கடவுள் என் காலில் விழுவது போல் அப்போது உணர்ந்தேன். சில சமயங்களில் நான் கிராமங்களுக்கு சென்று என் தாயின் வயதில் உள்ள முதியோர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களும் அதையே செய்வார்கள். இது சரியானது என்று எனக்கு தோன்றவில்லை. அவர்கள் தான் எனக்கு புண்ணியம் வழங்குகிறார்கள் என்று நான் நம்புகிறேன். அதனால் நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்கள் காலில் தான் நான் விழுந்து அவர்களின் ஆசிகளை பெறுவேன். எனது சிறிய ஈகோவும் மறைந்து போனது. இன்று முதல் நான் எனது ரசிகர்களை சந்தித்து இந்த மாற்றத்தை எனக்குள் கொண்டு வர சிறு முயற்சியை மேற்கொள்வேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை. இது தொடர்பான வீடியோக்களையும் விரைவில் விடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement