இந்த வருடம் சிறந்த நகைச்சுவைக்கான அவார்டு கண்டிப்பாக இந்த சீரியலுக்கு கிடைக்கும் – BK சீரியலை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
415
barathi
- Advertisement -

பாரதி கண்ணம்மா தொடரின் லேட்டஸ்ட் ப்ரோமோவை ரசிகர்கள் பலர் கலாய்த்து தள்ளி வரும் நிலையில் இந்த சீரியல் விரைவில் நிறைவடைய போகிறதா என்றும் சிலர் கமன்ட் செய்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர்கள் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது சீரியலில் வெண்பா- ரோகித் கதை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கின்றது. அதேபோல் ஹாஸ்பிடலில் பாரதி, கண்ணம்மா கதை சென்று கொண்டு இருக்கிறது. சமீப காலமாகவே பாரதி கண்ணம்மா சீரியல் பரபரப்பு இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி இருந்தது.

சீரியலின் கதை:

தற்போது பாரதியின் மருத்துவமனையில் கண்ணம்மா வேலை செய்து வருகிறார். இவர்கள் குடும்ப பிரச்சினை ஒரு பக்கம் இருக்க தற்போது அந்த மருத்துவமனையை தீவிரவாதி கும்பல் hijack செய்கிறது. இதை வைத்து தான் கடந்த சில வாரங்களாக இந்த சீரியலை நகர்த்தி வருகின்றனர். என்னதான் இந்த தந்திரம் கேலிக்கு உள்ளானாலும் இந்த தந்திரம் மூலம் மீண்டும் இந்த சீரியல் சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துவிட்டது.

-விளம்பரம்-

லேட்டஸ்ட் ப்ரோமோ :

அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக இந்த தொடரை மீம் கிரியேட்டர்கள் பலர் வச்சி செய்து வருகின்றனர். இதனாலேயே இந்த சீரியல் சமூக வலைதளத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஹாஸ்பிடலுக்கு புகுந்து அதிரடி படையினர் எல்லோரையும் காப்பாற்றுகிறார்கள். அந்த நேரத்தில் பாரதி மட்டும் வரவில்லை என்பதால் அவரை தேடி செல்கிறார் கண்ணம்மா.

கேலி செய்யும் நெட்டிசன்கள் :

அவரை ஒரு அறையில் கட்டி தொங்கவிட்டு இருக்கின்றனர். கண்ணம்மாவை வர வேண்டாம் என அவர் தடுக்கிறார். அதற்கு காரணம் அவர் உடலில் டைம்பாம் இருந்தது தான்.ஆனால் கண்ணம்மா அவர் விட்டு செல்லாமல் அவரை கட்டிபிடித்து கொள்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த ஆண்டில் சிறந்த நகைச்சுவை சீரியல் இது தான் என்று கேலி செய்து வருகின்றனர். மற்றொரு புறம் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த வாரத்தோடு சீரியல் முடிந்துவிடுமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement