ரஜினியை சந்தித்து காலில் விழுந்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ் – காரணம் இது தான்.

0
168
rajini
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து காலில் விழுந்து ராகவா லாரன்ஸ் ஆசி பெற்று இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சிவாஜி புரொடக்சன் தயாரித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் சந்திரமுகி பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் ,நாசர் மற்றும் பிரபு போன்ற முன்னனி நடிகர்கள் நடித்து அனைத்து ரசிகர்களிடம் கைதட்டை வாங்கி சென்ற . இப்படம் 1999 இல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

-விளம்பரம்-

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையும் அதிக வசூல் வேட்டையை நடத்தி சாதனை படைத்த படம் என்ற பெருமையும் இந்த படம் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுப்பதாக அதிகார பூர்வமான தகவல் கடந்த மாதம் வந்தது.

- Advertisement -

சந்திரமுகி – 2 :-

சந்திரமுகி 2 படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுபாஷ் சந்திரன் அவர்கள் தயாரிக்கிறார். ரஜினிகாந்த் அவர்கள் நடித்த சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இப்படத்தையும் இயக்குகிறார். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை போல இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

நாயகனாக நடிக்கிறார் லாரன்ஸ் :-

முனி ,காஞ்சனா ,காஞ்சனா 2 ,காஞ்சனா 3 ,சிவலிங்கா என இதுபோன்று தொடர் திகில் கதைகளிள் அரைத்த மாவுயை அரைத்தாலும் வித்தியாசமான கோணங்களிள் பேய்யை காட்டி, அத்துடன் காமெடியையும் சேர்த்து நடித்துவரும் ராகவா லாரன்ஸ். தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ரஜினியை சந்தித்த லாரன்ஸ் :-

இன்று மைசூரில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு. துவங்கியுள்ளது இந்த படத்தை நான்கு மாத காலங்களில் முடிக்கும் வகையில் பட குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். சந்திரமுகி 2 படத்தில் தனக்கு ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ்.

படக்குழுவின் நம்பிக்கை :-

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்.பல மேடைகளில் தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்று சொல்லி கர்ஜித்த ராகவா லாரன்ஸுக்கு ரஜினிகாந்த் நடித்த படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் . முதல் பாகத்தைப் போல் இரண்டாவது பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Advertisement