தனது பிறந்தநாளன்று இப்படி ஒரு கொடுமை. சுஜித் அம்மாவிடம் லாரன்ஸ் வைத்த வேண்டுகோள்.

0
22881
Sujith-Mother
- Advertisement -

இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தை தாண்டி பலரும் சுர்ஜித்துக்காக பிரார்த்தனையும்,பூஜைகளும் செய்தும் கடைசியில் அழுகிய நிலையில் தான் சுர்ஜித்தை வெளியே எடுத்தார்கள். தமிழகமே சுஜித் நிலையை குறித்து கதிகலங்கி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 4 நாட்களாக நிகழ்ந்தது.

-விளம்பரம்-
Image result for சுஜித்"

- Advertisement -

ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டது குழந்தை. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்க அரசாங்கமும்,மக்களும் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்கள். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய் முடிந்தது. ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளும் பரபரப்பாக செய்தார்கள்.

அதனை தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் போன்ற 10 அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டி சுரங்கம் போல் செய்து கொண்டு வந்தார்கள். ஆனால், ஆழ்துளை கிணறு பகுதியில் குழி தோண்டி செல்லும்போது அங்கு பாறைகள் அதிகமாக இருப்பதால் சுரங்கப் பாதையை ஏற்படுத்துவதில் கொஞ்சம் தாமதமானது. மேலும், குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று மக்களும், அரசாங்கமும் பல போராடங்களை சந்தித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

எவ்வளவோ முயற்சிகள் செய்தும், நான்கு நாட்களை கடந்தும் சுர்ஜித்தை உயிருடன் வெளியே எடுக்க முடியவில்லை. மேலும், சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் தான் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. பின்னர் சுஜித் இறந்து எவ்வளவு மணி நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்வதற்காக சுஜித் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். சமூக வலைத்தளங்களில் சுர்ஜித் இழப்பிற்கு சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுஜித்தின் இறப்பிற்கு இரங்கலை தெரிசித்துள்ள பிரபல நடிகர் லாரன்ஸ், சுஜித்தின் பெற்றோருக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.

Image result for raghava lawrence trust"


குழந்தை சுர்ஜிதின் மரணத்தால் இன்று அக்டோபர் 29 எனது பிறந்த நாளை கொண்டாட மனம் வரவில்லை. “ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்று விட்டான் சுர்ஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்நிலையில் சுர்ஜித்தின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது..சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுர்ஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ” அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுர்ஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுர்ஜித்தும் தங்களுடனே இருப்பான்..
அப்படி நீங்கள் குழந்தைய தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement