ரைஸாவிற்கு காதலர் இருக்கிறாரா..!ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்..!

0
163
harishkalyan

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளியாக பங்குபெற்று வரும் ”நிகழ்ச்சியில் ரைஸா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் பங்குபெற்றனர். அப்போது ஸ்ருதி ஹாசன், ரைசாவிற்கு காதலர் இருக்கிறாரா என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண், அவங்களுக்கு பாய் பிரென்ட்லாம் கிடையாது, அவங்க என்கிட்டயே என்னுடைய நண்பர்கள் யாரையாவது செட் செய்து கொடுங்கள் என்று கெஞ்சியுள்ளார் என்று வேடிக்கையாக பதிலளித்தார் ஹரிஷ் கல்யாண்.