சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகை ரைசா வில்சனிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.
தமிழ் சினிமாவில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ரைசா வில்சன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது தான் நடிகையாக ரைசா வில்சன் அறிமுகமான முதல் படமாம். 2017-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகை ரைசா வில்சனும் ஒரு போட்டியாளராக இருந்தார்.
‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு நடிகை ரைசா வில்சனிற்கு அடித்தது லக். ஆம்.. ஹீரோயினாக நடிக்க ரைசா வில்சனிற்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்தது. அந்த படம் தான் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் இளன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ரைசா வில்சன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் என் வீட்டையே மினி ஸ்குவாஷ் கோர்ட்டாக மாற்றி விளையாடிக் கொண்டிருக்கிறேன்” என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.
அதோடு, விளையாடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது, ‘ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹேஸ் டேக் லவ்’ என அடுத்தடுத்து நான்கு தமிழ் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ரைசா வில்சன்.