ரஜினியின் ஹாட்டிரிக் வெற்றிக்கு வித்திட்ட படம், 100 நாட்களுக்கு மேல் ஓடிய ராஜா சின்ன ரோஜா ஒரு பார்வை.

0
1766
Raja Chinna Roja
- Advertisement -

ஒரே வருடத்தில் மூன்று வெள்ளி விழா படங்களை கமலுக்கு பிறகு கொடுத்த ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் தான். 1989 ல் ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை என மூன்று வெள்ளி விழா படங்களை கொடுத்தார். அதே மாதிரி தொடர்ந்து மூன்று வெள்ளி விழா படங்கள் கொடுத்த ஒரே நடிகர் என்ற பெருமையும் சூப்பர் ஸ்டாருக்கு உண்டு. அந்த படங்கள் ராஜா சின்ன ரோஜா,மாப்பிள்ளை, பணக்காரன் ஆகியவை. 20 ஜுலை 1989 இல் AVM தயாரிப்பில் S.P.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படம் சேலம் பிரகாஷ் தியேட்டரில் வெளியானது. இதே திரையரங்கில் இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரஜினி, கௌதமி. ரவிச்சந்திரன். கோவை சரளா. பேபி ஷாலினி. சின்னி ஜெயந்த், விகே ராமசாமி என்று பலர் நடித்திருந்தார்கள். ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள நடிகர் ராஜா, வஞ்சகர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் நிறைந்த ஒரு வேகமான நகரத்திற்குள் நுழைகிறார். ஒரு நாள் அவர் தற்செயலாக தனது பால்ய நண்பர் பாஸ்கரை சந்திக்கிறார், அவர் ஒரு கெட்டுப்போன பணக்கார பையன். அவர் ராஜாவுக்கு ஒரு நடிப்பு வேலையை வழங்குகிறார், பின்னர் அவரை தனது மாமாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். ராஜா வீட்டு நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருப்பதோடு ஐந்து குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் (சோம்பேறித்தனம், படிக்காதது போன்றவை).

- Advertisement -

ராஜா, பாஸ்கர் தனது மாமாவை ஏமாற்றி பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்து விடுகிறார். அந்த பணத்தை வைத்து  பாஸ்கர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார். தற்காலிக குருட்டுத்தன்மை பெறும் ரவிச்சந்திரன், பிரச்சனையில் இருந்து மீண்டும், பாஸ்கரின் உண்மையைக் கண்டறிய குருடனாகவே நடிக்கிறார். உண்மையைக் கண்டுபிடித்த ரவிச்சந்திரன் பாஸ்கரனை வீட்டை விட்டு வெளியேற்ருக்கிறார். 

பின்னர் தன் மாமாவை பழிவாங்கும் விதமாக, பாஸ்கர் தனது மாமாவின் காரை எடுத்துச் செல்கிறார், இதன் விளைவாக ரவிச்சந்திரன் போதைப்பொருளுக்காக கைதுசெய்கிறது. பின், ராஜா குழந்தைகளுடன் பாஸ்கரின் குகைக்குச் சென்று அவரை கையும் களவுமாகப் பிடிக்கிறார். ராஜா இறுதியாக ஒரு நடிகராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை அடைய, ராஜாராம் படத்தை இயக்குகிறார்.

-விளம்பரம்-

ராஜா சின்ன ரோஜா படம் சூப்பர்ஸ்டார் குழந்தைகளுடன் குழந்தையாக நடித்த படம். குழந்தைகளை வெகுவாக கவர்ந்த படம். இந்த படத்தில் இடம்பெறும் ராஜா சின்ன ரோஜாவோடு என்ற பாடலை 90ஸ் சிறுவர்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். பாடலில் அனிமேசனில் யானை குரங்கு தோன்றியதை கண்டு குழந்தைகள் குதூகலித்து மகிழ்ந்தனர்.தமிழில் முதல் அனிமேசன் படம் என்ற பெருமை இந்த படத்தையே சாரும்.

முதலாளியை ஏமாற்றும் மேனேஜராக ரகுவரன் நடிப்பு பிரமாதமாக இருக்கும். ரஜினி அணிந்து வரும் தொள தொள மஞ்சள் பேண்ட்யை யாராலும் மறக்க முடியாது. ரஜினி,கவுதமி,சின்னி ஜெயந்த் இணைந்து வழங்கிய நகைச்சுவை காட்சிகள் இன்று நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும். சந்திரபோஸ் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக சூப்பர்ஸ்டார் யாருன்னா கேட்டா ,சின்ன குழந்தையும் சொல்லும் பாடல் சூப்பர்டூப்பர் ஹிட்டாகி சூப்பர்ஸ்டார் புகழ் பாடும் பாடலாக இன்றும் எங்கும் ஒலிக்கிறது.

ஒரு பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை என்ற போதைமருந்துகளால் ஏற்படும் சீரழிவை சுட்டி காட்டுவார் ரஜினி..!
படத்தில் இடம் பெறாத பாடல் ஒன்று வருங்கால மன்னர்களே .வாருங்கள்..! அதுவும் கேசட்டில் ஹிட்டானது. ஷாலினி குட்டி நட்சத்திரமாக கலக்கிய படம். AVM தயாரிப்பில் ரஜினி நடித்த 7 வது தொடர் வெற்றிபடமான ராஜா சின்ன ரோஜா குழந்தைகளுக்கான ஒரு பொழுதுபோக்கு படமாகும்.

Advertisement