பட்டையை கிளப்பி வரும் ராஜா ராணி சீரியலில் ஒரு நாளைக்கு சித்து மற்றும் ஆல்யா மானஸா வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
842
rajarani2
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது. மேலும், இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார். ஐபிஸ் ஆக வேண்டும் என லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. சீரியலில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு சந்தியா இருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக தன்னுடைய அண்ணன் மூலம் சரவணனுக்கு கல்யாணம் நடந்து விடுகிறது.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் கதை:

இருந்தும் சந்தியா எப்படியாவது கனவை நனவாக்க வேண்டும் என்று போராடுகிறார். ஆனால், குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. சந்தியாவை எதிரிபோல் நினைத்து பழி வாங்குவதற்காகவே அர்ச்சனா பல திட்டங்களை தீட்டி வருகிறார். எப்படியாவது ஒரு நல்ல மருமகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சந்தியா போராடுகிறாள். இதற்கு சரவணன் உறு துணையாக நிற்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் அர்ச்சனா தான் காரணம் என்பது சந்தியாவின் மாமியாருக்கு தெரிய வருகிறது.

ஆலியா- அர்ச்சனா மோதல்:

உடனே மாமியார் அர்ச்சனாவை கண்டித்து அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். ஆனால், தற்போது அர்ச்சனா கர்ப்பமாக இருப்பதால் வீட்டில் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். இருந்தும் சந்தியாவை பழி வாங்கி அவரை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று அர்ச்சனா மீண்டும் பல முயற்சிகளைச் செய்கிறார். இதனால் சந்தியாவிடம் அர்ச்சனா நேரடியாகவே சவால் விடுகிறார். இப்படி பல திருப்பங்களுடன் ராஜா ராணி 2சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் தற்போது ஆலியா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

ஆலியா இரண்டாவது முறை கர்ப்பம்:

கர்ப்பமாக இருந்தும் ஆலியா இந்த சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் இவர் சீரியலில் இருந்து விலகி விடுவார் என்றெல்லாம் பலரும் கேட்டு இருக்கிறார்கள். ஆனால், இவருடைய கதாபாத்திரம் மட்டும் கொஞ்சம் நாளைக்கு காண்பிக்க படாத மாதிரி இயக்குனர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் சீரியலில் சந்தியாவின் அன்னிக்கு குழந்தை பிறந்திருப்பதால் சந்தியா அவர்களை பார்க்க செல்வது போல் கொண்டு செல்கிறார்கள். இதனால் சந்தியா தன்னுடைய பிரசவத்தை முடித்து மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சந்தியாவின் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

ஆலியா ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்:

அது என்னவென்றால், சந்தியா கேரக்டரில் நடிக்கும் ஆலியா ஒரு நாளைக்கு 13 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். அதே போல சரவணன் வேடத்தில் நடித்து வரும் சித்து ஒரு நாளைக்கு பத்தாயிரம் வாங்குகிறார். ஹீரோவை விட ஹீரோயின் சந்தியாவுக்கு தான் சம்பளம் அதிகமாக இருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஹீரோயினுக்கு இவ்வளவு சம்பளமா! என்று கேட்டு வருகிறார்கள். ராஜா ராணி 1 சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஆயிலா என்ற ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement