ஐயோ, ராஜா ராணி 2 சீரியல் விரைவில் நிறுத்தமா ? அர்ச்சனாவை தொடர்ந்து இவரும் விலகலா ?

0
525
rajarani
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் முடிவுக்கு வர இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
rajarani

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும், இந்த தொடர் ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் :-

இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். சந்தியாவை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று சரவணன் போராடி வருகிறார். இந்த சுழலில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். இருந்தாலும் இவர் தொடர்ந்து சீரியலில் நடித்து இருந்தார். ஆனால், ஆல்யாவுக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார்.

archana

சீரியலின் கதை:

தற்போது சீரியல் ஆதி, ஜெசியை காதலித்து கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்ததும் ஆதி பொய் கூறுகிறார். உடனே ஜெசி வீட்டில் உள்ளவர்கள் போலீசில் ஆதிமிது புகார் அளிக்கப் போகிறார்கள். ஆனால், இதை சந்தியா தடுத்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் நான் ஆதியும் ஜெசியும் சேர்த்து வைக்கிறேன் என்று கூறுகிறார். வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஆதி செய்த தவறு தெரிய வருமா? ஆதி-ஜெசி திருமணம் நடக்குமா? என்ற பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய நடிகை:

இப்படி ஒரு நிலையில் சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா விலகி இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சந்தியாவுக்கு இணையாக மக்கள் மத்தியில் படு பேமஸாக இருப்பது வில்லியாக நடிக்கும் அர்ச்சனா கதாபாத்திரம் தான். இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் சீரியலில் விலகி இருப்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இவருக்கு பதிலாக சீரியல் நடிகை வேறு ஓரு அர்ச்சனா என்பவர் தான் நடித்து வருகிறார். இந்த நிலையில் சீரியல் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விலக உள்ள தகவல் வைரல் ஆகி வருகிறது.

முடியப்போகும் ராஜா ராணி 2 :

அதாவது, இந்த தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் சித்து. இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. தற்போது இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் சித்து ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகுகிறார் என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் வசனம் எழுதி வந்த பாரதியும் விலகி இருக்கிறார். இப்படி ராஜா ராணி 2 சீரியலை விட்டு ஒவ்வொருவராக விலகுவதால் சீரியல் கூடிய விரைவில் முடிய போகிறது என்ற பேச்சுவார்த்தை சோசியல் மீடியாவில் எழுந்து உள்ளது.

Advertisement