ஆல்யா மானஸாவின் மகளா இது – அதுக்குள்ள எப்படி வளந்துட்டார் பாருங்க. லேட்டஸ்ட் புகைப்படங்கள்

0
279
alya
- Advertisement -

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். மேலும், சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள். சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட், சோனியா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடியும் ஒருவர்.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்த இவர்கள் இருவரும் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்கள் சஞ்சீவ் -ஆல்யா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆல்யா மானஸா தன் மகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் அவரது மகள் நன்றாக வளர்ந்து இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் வியப்படைந்து உள்ளனர். இது ஒரு புறம் இருக்க ஆல்யா மானஸா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

இது குறித்து வீடியோ வெளியிட்ட அவர்கள், நான் 3 மாதம் கர்ப்பமாக இருந்தேன். தற்போது நான்கரை மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். ராஜா ராணி சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த நேரத்தில் இரண்டாவது குழந்தை எல்லாம் நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால், இந்த விஷயம் எங்களுக்கே ஷாக்கிங் சர்ப்ரைசாக தான் இருந்தது. இதைப்பற்றி ராஜா ராணி டீமிடம் சொல்லியிருந்தோம். அவர்கள் சேனல் தரப்பில் பேசிவிட்டு சீரியல் இருந்து ஆல்யாவை நீக்காமல் அதற்கேற்றாற்போல் கதையை மாற்றுவதாக உறுதியளித்திருக்கிறார்கள். இதை கேட்டபோது என்னுடைய கண்களில் கண்ணீர் வந்தது என்று ஆல்யா கூறியிருந்தனர்.

-விளம்பரம்-
Advertisement