அந்த கதாபாத்திரம் ஆல்யா மானசாவிற்காக எழுதியது. ராஜா ராணி இயக்குனர் சொன்ன சீக்ரட்.

0
35069
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருந்தது. இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடிகள் நிஜ வாழ்விலும் காதலித்து வந்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மானஸா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

-விளம்பரம்-
alya

அதேபோல சஞ்சீவ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்துவருகிறார். ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், ஆலியா மானசா கர்ப்பமாக இருப்பதால் அந்த தொடரில் நடிக்கவில்லை என்றும் இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த லாஸ்லியா அந்த தொடரில் நடிக்கப் போவதாகவும் வதந்திகள் பரவியது. இந்த நிலையில் ராஜா ராணி தொடரை இயக்கிய இயக்குனர் பிரவீன் பெண்ணெட் தற்போது பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற புதிய தொடரை இயக்க ஆரம்பித்துள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சிம்பிளாக கோவிலில் முடிந்த யோகி பாபுவின் திருமணம். மணமக்கள் ஜோடியின் புகைப்படம் இதோ.

இந்த தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருக்கிறார் பிரபல சின்னத்திரை ஜோடிகளான ஈஸ்வர் ஜெயஸ்ரீ தம்பதியரின் மகள் ரித்வா. ஆனால், இந்த கதை முதலில் ஆல்யா மானஸாவிற்கு எழுதப்பட்ட கதை தான் என்று இயக்குனர் பிரவீன் கூறியுள்ளார். அதில் நான் இதுவரை காதல் ஊடல் என்று தான் நினைக்கிறேன். ஆனால் இது எனக்கு புதிதாக இருக்கிறது குழந்தைகளை படிக்க வைத்து பழகியது கிடையாது. இந்த தொடரில் ரித்வா, ஆதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஐந்து வயது தான் ஆனால் நன்றாக நடிப்பார் .

-விளம்பரம்-
ரித்வா

ராஜா ராணி தொடர் முடிந்த பின்னர் ஆல்யாவிற்கா எழுதப்பட்ட கதைதான் இந்த பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியல். அவர் கர்ப்பமாக இருப்பதால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் இல்லாததால் ஹீரோயின் கதாபாத்திரத்தை சிறுமியாக மாற்றி ரித்வாவை நடிக்க வைத்து விட்டோம். மேலும், ராஜா ராணி தொடரில் வில்லியாக விரட்டிய ஷப்னம் இந்த தொடரில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

Advertisement