சிம்பிளாக நடைபெற்ற ஆல்யாவின் வளைகாப்பு. வீடீயோவை பகிர்ந்த சஞ்சீவ்.

0
39754
sanjeev
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று இருந்தது. இந்த தொடரில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஜோடிகளாக திகழ்ந்து வந்தார்கள். அதையும் தாண்டி இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியை நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வைத்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

Papu ku Baby shower ???

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

அடுத்த சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் யாருக்கும் அறிவிக்காமல் திடீர் திருமணம் செய்து கொண்டார்கள். ஆல்யா மானஸா காதலுக்கு அவரது பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இருப்பினும் சஞ்சீவ் வீட்டில் திருமணத்திற்கு சம்மதித்ததால் இவர்களது திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் தங்களது திருமணம் குறித்து பேசிய சஞ்சீவ், இந்த திடீர் திருமணம் குறித்து பேசிய சஞ்சீவ் “எங்களுக்கு மே 27ம் தேதியே திருமணம் முடிந்துவிட்டது. ஆல்யா மானசா வீட்டில் எங்கள் காதலுக்கு ஒப்புதல் இல்லை.

இதையும் பாருங்க : மொட்டை தலை, படு ஸ்லிம்மான உடல். ஆளே மாறியுள்ள நடிகர் ஜெயராம். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

எவ்வளவோ பேசி பார்த்தோம். வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் அவரசமாக திருமணம் செய்துகொண்டோம் மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் . அந்த புகைப்படத்தில் ஆல்யா மானஸா கழுத்தில் இஸ்லாம் மதத்தில் அணியும் தாலியும் இருக்கிறது. சஞ்சீவின் நிஜப்பெயர் “syed Azharuddin Buhari” என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆல்யா மானஸா தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவில்லை என்றாலும் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

View this post on Instagram

Papu ku Baby shower ???thank u so much for all your blessing ?

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

திருமணம் முடிந்து இத்தனை மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கிறார் என்று சஞ்சீவ் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் ஆல்யா மானஸாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு சிம்பிளாக நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களையும் விடீயோக்களையும் சஞ்சீவ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ஆல்யா மானஸா விரைவில் அழகான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

Advertisement