அது எப்படி திமிங்கலம் நஸ்ரியா பைக் நயன்தாரா கிட்ட வந்துச்சி – ராஜா ராணியில் இத நோட் பன்னீங்களா ?

0
654
rajarani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அட்லீ. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் அட்லி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று ராஜா ராணி. இந்த படம் 2013 ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் வெளிவந்தது. இந்த படத்தின் மூலம் தான் அட்லி திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், முதல் படத்திலேயே இவர் மிகப் பிரபலமான இயக்குனர் ஆனார். இதற்கு முன்பு இவர் இயக்குனர் ஷங்கருடன் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம், சத்யன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் தெலுங்கு மொழியில் ராஜா ராணி என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

- Advertisement -

ராஜா ராணி படம் பற்றிய தகவல்:

அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த படத்தின் கதையைப் போலவே பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்ட படம். படத்தில் ஆர்யா, நயன்தாரா இருவருக்கும் காதல் தோல்வி ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கிறது.

ராஜா ராணி படத்தின் கதை:

இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றாலும் தங்களது பெற்றோர்களுக்காக இருவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் இவர்கள் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ தடுமாறுகிறார்கள். இதற்கிடையில் இவர்களுடைய முந்தைய காதலைப் பற்றி இருவரும் அறிந்து கொள்கிறார்கள். பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து இருவரும் சேர்வது தான் படத்தின் கதை. இந்த படம் வெளியாகி பல பிரிவுகளில் விருதுகளை வாங்கிக் குவித்து இருந்தது.

-விளம்பரம்-

ராஜா ராணி படத்தில் வந்த மிஸ்டேக்:

இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கும் சினிமா உலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தில் வந்த ஒரு காட்சியை ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக்கி வருகிறார்கள் அது என்னவென்றால், இந்த படத்தில் ஒரு காட்சியில் நஸ்ரியா ஸ்கூட்டி வைத்திருந்தார் வைத்திருப்பார். அந்த ஸ்கூட்டியின் நம்பர் TN10W 6516. இதே ஸ்கூட்டியை நயன்தாரா வரும் காட்சியிலும் காண்பிக்கிறார்கள்.

இயக்குனரை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு காட்சியையும் சோசியல் மீடியாவில் ஒன்றாக இணைத்து ரசிகர்கள், நஸ்ரியா செத்துப் போன பிறகு அவங்க அங்கிள் வண்டிய OLXல். சேல்ஸ் பண்ணி இருக்காரு அதைதான் நயன்தாரா வாங்கி இருக்காங்க என்று கிண்டல் கேலியாக கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். இப்படி ராஜா ராணி படத்தில் வந்த ஒரு சிறிய மிஸ்டேக்கை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு பயங்கரமாக மீம்ஸ், ட்ரோல்ஸ் போட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement