வயிற்றில் ஸ்கேன் ரிப்போர்ட் – கர்ப்பமாக இருப்பதை வித்யாசமாக அறிவித்த ராஜா ராணி சீரியல் நடிகை.

0
207
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகை நிஹாரிகா கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த மத்தியில் விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று முடிந்த தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி இருந்தார். முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து இருந்தார். மேலும், இந்த சீரியலில் ஹீரோயினி சந்தியாவின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நிகாரிகா. இவர் நடிகை மட்டும் இல்லாமல் டான்சரும் ஆவார்.

- Advertisement -

நிஹாரிகா நடிக்கும் சீரியல்:

மேலும், இவர் இந்த சீரியல் மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் என்ற தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் விஜய் டிவியில் மட்டும் இல்லாமல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த இதயத்தை திருடாதே சீரியலிலும் டான்ஸராக நடித்திருந்தார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 என்ற சீரியலில் நடித்து இருக்கிறார்.

நிஹாரிகா குறித்த தகவல்:

இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது . அது மட்டும் இல்லாமல் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக நடனமாடிருந்தார். பின் இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் ரன்னர் அப் பட்டத்தை பெற்றிருந்தார். இதனிடையே நடிகை நிகாரிகா அவர்கள் இயக்குனர் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

நடிகை நிகாரிகா பதிவு:

இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை நடிகை நிகாரிகா வெளியிட்டு இருக்கிறார். அதாவது, நிஹாரிகா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement