சூர்யாவின் வேல் படத்தில் கயல் சீரியல் சஞ்சீவி நடித்திருக்கும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக நடிகர் சஞ்சீவ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழில் குளிர் 100 டிகிரி என்ற படத்தில் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் இவருக்கு வெற்றி கொடுக்கவில்லை.
அது மட்டும் இல்லாமல் அதனை தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் இவர் சின்னத்திரைக்கு சென்று விட்டார். இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி சீரியலில் சின்னையா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இவர் காற்றின் மொழி என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கயல் என்ற ரோலில் சைத்ரா ரெட்டி நடிக்கிறார். கிட்டத்தட்ட இயக்குனர் கே பாலச்சந்திரன் அவர்களின் படக்கதை தான் இந்த சீரியலின் கதை என்றும் பலரும் கூறி வருகின்றனர். கயல் அவளுடைய குடும்பம் மற்றும் அவரை சுற்றி இருக்கும் நபருக்காக வாழ்கின்றவர். இவரை எழில் காதலிக்கிறார். தன்னுடைய வருமானத்தின் மூலம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கயல் காப்பாற்றி வருகிறார்.
சஞ்சீவ்-ஆல்யா திருமணம்:
மேலும், இந்த சீரியலின் மூலம் சஞ்சீவ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனிடையே சஞ்சீவ் அவர்கள் ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த ஆல்யா மானசாவை காதலித்தார். இருவரும் அந்த சீரியல் முடிவதற்குள்ளே தங்களுடைய காதலை அறிவித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
youtube சேனல்:
அதற்குப்பின் ஆல்யாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா சிறிய இடைவெளிக்கு பிறகு கடுமையாக தன்னுடைய உடல் எடையை குறைத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும், இவர்கள் இருவரும் youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார்கள். அதில் அவர்கள் தங்கள் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் இவர்களை வீடியோக்களை ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.
சஞ்சீவ் லேட்டஸ்ட் புகைப்படம்:
இந்நிலையில் சஞ்சீவ் தன்னுடைய சோசியல் மீடியாவில் புகைப்படம் ஒன்றை பதிந்திருக்கிறார். அதில் அவர், வேல் படத்தில் தான் நடித்த ஒரு காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்து நான் நடிகராக நடித்த முதல் படம். என்ன படம் கண்டுபிடிங்கள்? என்று கேட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வேல் என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள். அதாவது, சூர்யா நடித்த வேல் படத்தில் சஞ்சீவ் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.