ஏன் இந்த விளம்பரம் – மரக் கன்று நட்ட சஞ்சீவை கேலி செய்த ரசிகர்கள். சஞ்சீவ் கொடுத்த பதில்.

0
4005
vivek
- Advertisement -

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது இதற்கு பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். விவேக் இருந்த போது கிரீன் கலாம் மூலம் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்பதை ஒரு இலக்காக கொண்டுவந்தார். இதுவரை அவர் 30 லட்சத்துக்கும் மேலான மரங்களை நட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : பக்கத்து வீட்டு ஆன்டி ரோலுக்கு வேனா உன்ன கூப்புடுவாங்க – பிகில் பட நடிகையை கேலி செய்யும் திரிஷாவின் ரசிகர்கள்.

- Advertisement -

விவேக் இறந்துவிட்டதால் அவரின் 1 கோடி மரக் கன்று கனவு நிறைவேறதா என்று பலர் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், விவேக் இறந்த போது பலரும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மரக் கன்றுகளை நட்டனர். அதே போல பல பிரபலங்களும் மரக் கன்றுகளை நட்டு விவேக்கின் 1 கோடி மரக் கனவை நினைவாக்க உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகர் சஞ்சீவும் தன் பங்கிற்கு மரக் கன்று ஒன்றை நாட்டார்.

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதை பார்த்த பலர் பாராட்டினாலும், ஒரு சிலர் ஏன் இந்த விளம்பரம் என்று கேலி செய்தனர். இதற்கு பதில் அளித்துள்ள சஞ்சீவ். இப்படி ஒரு நிலையில்  நான் மரக் கன்று நடத்தை பற்றி பலர் பல விதமாக சொல்கிறார்கள். NGO Stem என்ற அமைபோடு சேர்ந்து நான் இதை செய்தேன். முட்டாள் தனமாக கமண்ட் செய்வதை விட்டுவிட்டு மரம் நடுங்கள். அது சுற்று சூழலுக்கு நல்லது என்று பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement