ஆல்யா தப்பு செய்தால் இப்படி தான் தண்டிப்பேன். நடு ரோட்டில் ஆல்யா செய்த செயல். சஞ்சீவ் பதிவிட்ட வீடியோ.

0
3058
alya
- Advertisement -

தமிழ் சினிமா திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமா துறையில் உள்ள நடிகர், நடிகைகளின் புகழுக்கு நிகராக சீரியல் நடிகர்களும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளனர். சமீப காலமாக மக்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அதிலேயேயும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-
View this post on Instagram

I just love papu's reaction in this vdo ??? @alya_manasa

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும்; செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள்.

- Advertisement -

ஆனால், இவர்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது. அதற்கு காரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் என்று கூறப்படுகிறது. இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆல்யா மானஸாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.மேலும், தங்களது மகளுக்கு அய்லா சையத் என்று பெயர் வைத்துள்ளார்கள். அதாவது ஆல்யா என்ற பெயரில் இருந்தும் சஞ்சீவ்வின் உண்மையான பெயர் “syed Azharuddin Buhari”  என்ற பெயரில் இருந்தும் எடுத்து இந்த பெயரை வைத்துள்ளார்கள்.

-விளம்பரம்-

இருப்பினும் கொரோனா பிரச்சனை எல்லாம் முடிந்த பின்னர் தான் தங்களது மகளை வெளியுலகத்திற்கு காட்டுவோம் என்று குறிக்கோளுடன் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ், ஆல்யா மானசா தவறு செய்தால் அவரை எப்படி தண்டிப்பேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement