காதலுடன் சண்டையா..! ட்வீட் டெலீட் செய்த செம்பா.? கார்த்தியுடன் காதலா..? வாழ்க்கை கேட்ட செம்பா

0
1262
Aalyaa-manas
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி ‘ சீரியலில் செம்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஆலியா மானஸா. சினிமா துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் நடிகை நயன்தாரா. அவரை போலவே தோற்றத்தை உடையதால் இவரை சின்னத்திரை நயன்தாரா என்று பலரும் இவரை அழைத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

raja-rani-serial

- Advertisement -

சின்னத்திரை நடிகையான மானஸா , ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சில் பங்கேற்றுள்ளார். அப்போது நடன இயக்குனராக இருந்த மானஸ் என்பருடன் காதல் ஏற்பட்டு, அவரை இன்று வரை காதலித்து வருகிறார்.

ஆனால் தற்போது நடிகை மானஸா, ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் சஞ்சீவ் மீது காதலில் இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். ஆனால் மானஸா,பல முறை சஞ்சீவ் தனது நல்ல நண்பர் என்று கூறியும், இவர்கள் இருவரையும் இணைத்து பேசி வருபவர்கள் நிறுத்தவில்லை.

-விளம்பரம்-

alya manasa lover

சமீபத்தில் நடிகை மானஸா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சோகமான புகைப்படத்தை பதிவிட்டதோடு “என்னுடைய சந்தோஷமான வாழ்கை தனக்கு மீண்டும் வேண்டும் என்பது போல அதில் கூறியுள்ளார். இதனால் அவரது காதலரான மானசிற்கும், மானஸாவிற்கும் எதாவது பிரிவு ஏற்பட்டுள்ளதா என்று மானஸாவின் ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.”

Advertisement