தனக்கு குழந்தை பிறந்ததை குயூட் வீடியோ மூலம் அறிவித்த ராஜா ராணி சீரியல் நடிகை.

0
8614
sridevi
- Advertisement -

ராஜா ராணி, பூவே உனக்காக போன்ற பலவேறு சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரீதேவி அசோக்கிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழில் பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம்பிடித்தவர் ஸ்ரீதேவி. தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் தமிழில் ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 3-1-1024x688.jpg

இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். ராஜா ராணி’ சீரியலில் கொடூரமான வில்லியாக, பார்ப்பவர்களின் கண்களில் கத்திரி வெயிலைக் கடத்திக்கொண்டிருந்தவர், ஶ்ரீதேவி. ஆனால், நிஜத்தில் இவர் மார்கழி மாத அதிகாலைபோல செம கூல், பயங்கர ஜாலி டைப். செல்லப் பிராணிகளின் காதலியான ஶ்ரீதேவிக்கு, அவரைப்போலவே செல்லப் பிராணி காதலரான அசோக் சிந்தாலா என்பவருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதையும் பாருங்க : ரெண்டு முறை வாய்ப்பு வந்தும் அந்த ரஜினி படத்துல நடிக்க முடியல – அத நெனெச்சி அழுது இருக்கேன் – நடிகை சதா வேதனை.

- Advertisement -

தனது கணவர் குறித்து பேசிய ஸ்ரீதேவி, என் கணவர் அசோக் சிந்தாலா, பெங்களூரில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைபார்க்கிறார். அவருக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். குறிப்பாக, பெட் Pet போட்டோகிராஃபி கைவந்த கலை. அவ்வளவு அழகாக எடுப்பார். நம்மூரில் பெட் போட்டோகிராஃபர்கள் குறைந்த அளவே இருக்காங்க. இவருடைய புகைப்படங்களைப் பார்த்து, என் பெட்ஸை போட்டோ எடுக்கணும்னு பேசினேன். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பிச்சது என்று கூறி இருந்தார் ஸ்ரீதேவி.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் தனது பிறந்த நாள், வளைகாப்பு, மற்றும் திருமண நாளை குடுத்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஸ்ரீதேவி. இந்நிலையில் இன்று தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராமமில் ஒரு குயூட் விடியோவுடன் அறிவித்திருக்கிறார் ஸ்ரீதேவி.

-விளம்பரம்-
Advertisement