ராஜா ராணி செம்பாவா இது.! பாத்து கிண்டல் பண்ணக்கூடாது.! புகைப்படம் உள்ளே.!

0
1301
semba
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.

Watashi no tomodachi ????

A post shared by Alya Manasa (@alya_manasa) on

ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ் என்று அசத்தி வரும் மானசா தனது அன்றாட நடவடிக்கைளையும், சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

இவர் எதை பதிவிட்டாலும் அது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி விடுகிறது, சமீபத்தில் இவர், ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘வித் மை பேபி’ என்று குறிப்பிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் இருவரையும் இணைத்து பேச, அந்த பதிவை உடனே தூக்கி விட்டார்.

Aalya-maanas

இந்நிலையில் நடிகை மானசா, புதிதாக பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அதில் நடிகை மானசா சில ஜப்பான் பெண்களுடன் நின்றுகொண்டிருகிறார். ஏதோ பல வருடங்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்பபடம் போல தெரியும் அந்த புகைப்படத்தில் நடிகை மானஸா மேக் அப் இல்லாமல் மிகவும் ஒல்லியாக தோற்றமிளக்கிறார்.

இந்த புகைப்படத்தை கண்ட சில இன்ஸ்டகிராம் வாசிகள் , இது தான் உங்கள் உண்மையான அழகு, மேக் அப் போடாமல் உங்கள் முகத்தை பார்க்க முடியவில்லை என்று கிண்டல் செய்துள்ளனர். இன்னும் சிலரோ நீங்கள் என்ன ஜப்பான் குடும்பத்தை சார்ந்தவரா என்று கண்ட மேனிக்கு மானஸாவின் இந்த புகைபடத்தை கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால், இவரது ரசிகர்கள் மானஸாவின் இந்த புகைப்படத்தை ரசித்து வருகின்றனர்.

Advertisement