என்னை திருமணம் செய்துகொள்.! ராஜா ராணி சீரியல் நடிகை வீட்டில் ரகளை செய்த ரசிகர்.!

0
3933
- Advertisement -

சினிமாவிற்கு இணையாக தற்போது சீரியல் நடிகர்களுக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றனர். அதிலும் சீரியலில் வரும் நடிகர்களுக்காக இளசுகள் கூட சீரியல் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களாக மாறி விடுகின்றனர்.

-விளம்பரம்-
Image result for raja rani rithika

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் நடித்து வரும் ரித்விகாவை திருமணம் செய்துகொள்ள சொல்லி ரசிகர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படியுங்க : இவர்கள் தான் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள்.! முழு லிஸ்ட் இதோ.! சம்பவம் இருக்கு.! 

- Advertisement -

நேற்று காலை ரித்திகா வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த இளைஞர், “நான் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து வருகிறேன். எனக்கு ரித்திகாவை மிகவும் பிடிக்கும். சீரியலில் பார்த்து அவரை காதலிக்கிறேன். எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள்” என்று ரித்திகாவின் தந்தையிடம் கூறியுள்ளார்.

முதலில் அவரை சமாதானம் செய்து வைத்து வெளியே அனுப்ப முயற்சி செய்துள்ளனர்.ஆனால், அந்த ரசிகரோ தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரித்திகா கூறினால் தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறியுள்ளார். பின்னர் வேறு வழியின்றி ரித்திகாவின் தந்தை சுப்பிரமணியன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சம்பவம் குறித்து தெரிவித்தார்.

-விளம்பரம்-
Image result for raja rani rithika

பின்னர் அதைதொடர்ந்து போலீசார் நடிகை வீட்டில் தகராறில் ஈடுபட்ட பரத்தின் பெற்றோரை சென்னைக்கு நேரில் அழைத்து இனி இதுபோல் தவறு செய்யமாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்டு, எச்சரித்து  பெற்றோருடன் பரத்தை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வடபழனில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement