நடிகர் உடனான காதல் வதந்திக்கு ராஜா ராணி அர்ச்சனா போட்ட ரீல்ஸ் – வைரலாகும் வீடியோ.

0
784
archana
- Advertisement -

ராஜா ராணி அர்ச்சனா போட்டிருக்கும் ரீல்ஸ் விடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது குடும்ப சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இந்த தொடர் உள்ளது. ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். மேலும், தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கள்ளக்குறிச்சி விவகாரம் – முன்னரே எச்சரித்துள்ள எம் எல் ஏ – பல உண்மைகளை போட்டுடைத்த சவுக்கு சங்கர்.

ராஜா ராணி 2 சீரியல்:

இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்தார். ஆனால், ஆல்யா குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். மேலும், இந்த தொடரில் நாயகி சந்தியாவுக்கு இணையாக மக்கள் மத்தியில் படு பேமஸாக இருப்பது வில்லியாக நடிக்கும் அர்ச்சனா கதாபாத்திரம் தான். தான் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் அர்ச்சனா.

-விளம்பரம்-

விஜே அர்ச்சனா:

இவர் தொகுப்பாளினியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இதை அடுத்து விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் அர்ச்சனா பங்கேற்று இருந்தார். பிறகு இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சோசியல் மீடியாவில் இவருடைய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் மூலம் தான் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், இவரை திட்டி தீர்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சீரியலில் இவர் வில்லியாக கலக்கி வருகிறார்.

அர்ச்சனா- அருண்பிரசாத் காதல் :

இது ஒரு பக்கமிருக்க விஜே அர்ச்சனா பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருணை காதலிக்கிறார் என்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்தது என்றும் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றெல்லாம் வந்தது. அதேபோல் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியிலும் அர்ச்சனாவிற்கு சிறந்த வில்லி என்ற விருதை கிடைத்தது. அப்போது பலரும் அர்ச்சனாவை டாக்டர், டிஎன்ஏ டெஸ்ட் என்றெல்லாம் கலாய்த்து இருந்தார்கள். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் கிசுகிசுக்கள் என்று வெளியானது.

அர்ச்சனா ரீல்ஸ் வீடியோ:

சமீபத்தில் இருவரும் காரில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இப்படி கடந்த சில மாதங்களாகவே அர்ச்சனா- அருண்பிரசாத் காதல் வதந்தி சின்னத்திரையில் உலா வந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் வந்த வதந்திகளை கலாய்க்கும் விதமாக கமலின் பஞ்சதந்திரம் படத்தில் இடம்பெற்ற உன்னோடு காதல் என்று பேச வைத்தது என்ற பாடலுக்கு எக்ஸ்பிரஷன் கொடுத்து வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல அருண் உடனான காதல் வதந்தியா? என்ற கேள்வி கேட்டு அர்ச்சனாவை திணற வைத்து வருகின்றனர்.

Advertisement