‘பிறந்தநாள் விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டு இருந்தார்’ – மாணிக்க விநாயகம் குறித்து கலங்கிய ராஜலட்சுமி.

0
825
rajalakshmi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல பின்னணிப் பாடகராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் மாணிக்கம் விநாயகர். இவர் தமிழ் உட்பட பல மொழிகளில் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நேற்று இவர் உடல் நிலை காரணமாக சென்னையில் காலமானார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பாடகி ராஜலட்சுமி, மாணிக்கவிநாயகம் குறித்து சில உணர்வு பூர்வமான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

-விளம்பரம்-

பனிரெண்டாம் வகுப்பின் போதே தெரியும் :

அதில் அவர் கூறியிருப்பது, எங்களுடைய மானசீக குரு என்றால் நான் மாணிக்கம் அப்பாவை தான் சொல்வேன். எங்களுக்கும் அவருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருந்து கொண்டுதான் இருந்தது. நான் மீடியாவில் அறிமுகமாவதற்கு முன்பு பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே வேதாரண்யத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு அப்பாவும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் பைனல்ஸ் :

அங்கே என்னுடைய பாட்டை கேட்டுட்டு மேடையிலேயே ரொம்ப நல்ல பாடுகிறாய், கண்டிப்பாக நீ பெரிய ஆளா வருவாய் என்று பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என் கணவர் பைனலில் பாடும் போதும் மாணிக்கம் அப்பா தான் விருந்தினராக வந்திருந்தார். மேலும், என் கணவர் பாடி முடித்ததும் அப்பா அந்த மேடையிலேயே என் கணவரிடம் ‘அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் உனக்கு மகனாகப் பிறக்கணும் என்று சொன்னார். அந்த தருணம் எங்களால் மறக்கவே முடியாது. அதோடு எங்கள் வாழ்க்கையிலே ரொம்ப ஸ்பெஷலான நாள் அது.

யதார்த்தமான தங்கமான மனிதர் :

சமீபத்தில் கூட அப்பாவுடைய பிறந்தநாள் விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டு இருந்தார். அங்கு சினிமாத்துறையில் பிரபலமான பெரிய நடிகர்கள், பெரிய இசை அமைப்பாளர்கள், நடிகர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். எல்லோரையும் எப்படி வரவேற்றுப் பேசினாரோ, அப்படித்தான் எங்களையும் அவர் உபசரித்தார். அவ்வளவு யதார்த்தமான தங்கமான மனிதர். அதுமட்டுமில்லாமல் அவர் எங்களை எங்கு சந்தித்தாலும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள், விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது, எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்கணும் என்று அடிக்கடி சொல்லுவார். அந்த அளவிற்கு எங்கள் மீது அக்கறை கொண்ட நல்ல உள்ளம்.

-விளம்பரம்-

அவருடைய மறைவு செய்தி கேட்டதும் எங்களுக்கு பேரிடியாக இருந்தது. மேலும், தமிழ் இருக்கிற வரைக்கும், சினிமா இருக்கிற வரைக்கும் அவருடைய பாடல்கள் மூலம் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்று கண்கலங்கியபடி கூறியிருந்தார் ராஜலட்சுமி. மேலும், தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வருகிறார் ராஜலட்சுமி. ‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. இவர்கள் இருவரும் சேர்ந்து பல மேடைகளில் பாடல்களை பாடி இருக்கிறார்கள். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தோடு வீட்டையும் தட்டி சென்றார்கள்.

புஷ்பா மூலம் பிரபலமான ராஜலட்சுமி :

பின் இவர்கள் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘வாய்யாசாமி’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த பாடலை தமிழில் ராஜலட்சுமி தான் பாடியிருந்தார். இந்த பாடல் மூலம் இவர் படு பேமஸ் ஆனார் என்று சொல்லலாம். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. செம்மர கடத்தலை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

Advertisement