அந்த ஒரே ஒரு வருத்தம் தான் – அதிமுக மதுரை மாநாட்டில் பாடிய அனுபவம் குறித்து செந்தில் ராஜலக்ஷ்மி.

0
1403
- Advertisement -

மதுரையில் நடந்த மாநாடு குறித்து ராஜலட்சுமி செந்தில் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே மதுரையில் நடந்த மாநாடு தான். மதுரையில் நேற்று மதுரையில் அதிமுக சார்பில் பொன்விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல கலைஞர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அதோடு இந்த மாநாடு குறித்து பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மக்களை தங்களுடைய பாடல்களின் மூலம் மக்களிசை பாடகர்களான செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி என்டர்டைன்மென்ட் செய்கின்றார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்களுடைய கச்சேரியும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ராஜலட்சுமி பேட்டி அளித்திருக்கிறார் . அதில் அவர், எங்களுக்கு விஜய் பாஸ்கர் சாரை ரொம்ப வருஷமாக தெரியும். அவர் எங்க மாவட்டம் தான். சூப்பர் சிங்கர் டைட்டில் வென்ற போது எங்களுக்காக அவர் பாராட்டு விழா எல்லாம் ஏற்பாடு செய்து எங்களை கௌரவ படுத்திருந்தார்.

- Advertisement -

மதுரை மாநாடு குறித்து பேட்டி:

அப்போதிலிருந்தே அவருடன் நல்ல நட்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இதுவரை நாங்கள் பல மாநாடுகளில் நிகழ்ச்சி செய்து இருக்கிறோம். அந்த மாதிரியான ஒரு மாநாடு தான் மதுரையில் நடந்த மாநாடு என்று நினைத்துப் போனோம். ஆனால், அங்க போனபோதுதான் அவ்வளவு பெரிய கூட்டம். இந்த அளவுக்கு கூட்டம் வரும் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அந்த கூட்டத்தை பார்த்து நம்ம பாட்டு மூலம் சந்தோஷப்படுத்த போறோம் என்று நினைத்து எனக்கு உற்சாகமாக இருந்தது.

திண்டுக்கல் சீனிவாசன் வீடியோ:

ஆனால், சீக்கிரம் முடிக்க சொல்லிட்டாங்களே என்ற ஒரு வருத்தம் தான். மத்தபடி அவ்ளோ பெரிய கூட்டத்திற்கு முன்னாடி பாடினது எனக்கு பெரிய அனுபவத்தை கொடுத்திருந்தது. அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என்ற பாடலை பாடும் போது திண்டுக்கல் சீனிவாசன் அந்த பாடலை என்ஜாய் பண்ணின வீடியோ எல்லாம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருந்தது. நான் சின்னப் பிள்ளையாய் இருந்தபோது திண்டுக்கல் சீனிவாசன் ஐயாவை தெரியும். நம்ம வீட்டு பொண்ணுன்னு தான் என்னை அவர் ட்ரீட் பண்ணுவார். இந்த பாட்டை பாடறதுக்கு முன்னாடி என் ஊரு என்று சொல்லியும் சீனிவாசன் ஐயா பெயரை சொல்லியும் தான் பாடினேன்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியின் அனுபவம்:

ஐயா அந்த பாடலை கேட்டு என்ஜாய் பண்ணி ரசித்தார் என்பதை கேட்டாலே உண்மையா சந்தோஷமாக இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் விஜய் பாஸ்கர் தான் எங்களை வழி நடத்தி இருந்தார். அவர் நிகழ்ச்சி முடிந்ததும் டைம் தான் கொடுக்க முடியவில்லை, அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் இருக்கு என்று சொல்லிவிட்டு எங்களுடைய பர்ஃபார்மன்ஸ் பார்த்து பாராட்டியிருந்தார். எல்லா கட்சிகளிலும் கலந்து பாடி இருந்தோம்.ஆனால், இந்த மாநாடு நிகழ்ச்சியில் தான் எங்களை சொன்ன நேரத்து அனுப்பி வைத்து இருந்தார்கள்.

மாநாடு குறித்து சொன்னது:

சமீபத்தில் கூட சென்னையில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு பாடி இருந்தோம். அங்கு முதலமைச்சர் எல்லாம் வந்திருந்தார். அங்கேயும் அதே உற்சாகத்துடன் பாடினோம். இந்த மாநாடு பொறுத்த வரைக்கும் எங்களுக்கு புதுவித அனுபவமாக இருந்தது. விஜய் பாஸ்கர் சார் சொன்னதால் நாங்கள் கொஞ்சம் சீக்கிரமாக மாநாடு நடந்த இடத்திற்கு போய்விட்டு போனோம். பின் சுலபமாக வெளியில் வந்து விட்டோம். இல்லைன்னா ரொம்ப கஷ்டமாக இருக்கும். அவ்வளவு கூட்டம் இருந்தது. அந்த கூட்டத்தை பார்க்கவும் எனக்கு படையப்பா பட கிளைமாக்ஸ் காட்சி தான் நினைவுக்கு வந்தது. அந்த அளவிற்கு மக்கள் திரண்டு இருந்தார்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement