‘எம்.ஜி ஆர் மாதிரி இல்லனாலும்’ தாயின் பிறந்தநாளில் அறக்கட்டளை துவங்கிய லாரன்ஸ் நெகிழ்ச்சி.

0
460
- Advertisement -

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதன் பின் ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘துர்கா’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. ராகவா லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. இதனை தொடர்ந்து இவர் 17 வருடங்கள் கழித்து உருவான சந்திரமுகி 2 படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் ராதிகா, மகிமா,கங்கனா, லட்சுமி மேனன், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் திரைப்பயணம்:

இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இதனை அடுத்து கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து லாரன்ஸ் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இவர் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல சமூக சேவைகளை செய்து கொண்டு இருக்கிறார். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார்.

லாரன்ஸ் சமூக சேவை:

இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் கூட இனி யாரும் என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம், உங்களால் முடிந்தவர்களுக்கு நன்கொடை உதவி செய்யுங்கள் என்று ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னையின் பிறந்தநாள். இதை ராகவா லாரன்ஸ் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார். மேலும், சோசியல் மீடியாவில் அவர், இன்று என் அம்மாவின் பிறந்த நாள்.

-விளம்பரம்-

லாரன்ஸ் அம்மா பிறந்தநாள்:

உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை என்று தன்னுடைய தாயுடன் சேர்த்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து விட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ‘சேவையை கடவுள்’ என்ற அறக்கட்டளையை ராகவா லாரன்ஸ் தொடங்கியிருக்கிறார். இந்த அறக்கட்டளையில் ராகவா லாரன்ஸ் உடன் நடிகர் எஸ் ஜே சூர்யா, பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரும் செயல்படுகிறார்கள். இந்த அறக்கட்டளையில் மாற்றம் என்ற செயல்திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் லாரன்ஸ். இந்த திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை தன்னார்வலர்கள் மூலம் கொண்டு போய் சேர்ப்பது.

லாரன்ஸ் பேட்டி:

இதனுடைய முதல் தொடக்கமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்களை 10 கிராமத்திற்கு ராகவா லாரன்ஸ் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக இவர் பேட்டியில், என்னை இந்த அளவுக்கு வளர்த்தது என்னுடைய அம்மா தான். சின்ன வயசிலேயே என் அம்மா, என் மகனை எம்ஜிஆர் மாதிரி வளர்ப்பேன் என்று சொல்லி இருந்தார். அப்போது எல்லாரும் சிரித்தார்கள். எம்ஜிஆர் அளவுக்கு இல்லை என்றாலும் அவரை சிறிய அளவிலாவது நான் செயல்படுவேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement