‘அது என் கடைசி சினிமாவாக இருந்துவிடக்கூடாது’ கண் கலங்கிய ரஜினி.

0
5462
- Advertisement -

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருந்த நிலையில் படப்பிடிப்புக் குழுவில் சிலருக்கும் கொரோனா ஏற்பட்டதால் ரஜினிகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது . இபப்டி ஒரு நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுபவிக்கப்பட்டார். மருத்துவ மனையில் இருந்து திரும்பிய ரஜினி தனது அரசியல் முடிவை அறிவித்தார்.

-விளம்பரம்-
`அண்ணாத்த’ படக்குழுவுடன் ரஜினி

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படைத் தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறையுள்ள என் மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

இதையும் பாருங்க : அதுக்கப்புறம் தான் அப்பா இவ்ளோ நகை போடவே ஆரம்பிச்சாரு. சங்கர் கணேஷ் மகன் ஸ்ரீ சொன்ன உருக்கமான பின்னணி.

- Advertisement -

 ரஜினியின் திடீர் உடல்நலக்குறைவால் பாதியில் நிறத்தப்பட்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது உடல் நலம் தேறியுள்ள ரஜினி, படப்பிடிப்புகளை தொடர ஒப்புதல் அளித்துள்ளார்.  மார்ச் 8-ம் தேதி முதல் அதாவது அடுத்த திங்கள் முதல் ‘அண்ணாத்த’ ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் எனத்தெரிகிறது. ரஜினிகாந்த் 20 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாகத்தான் அவர் மீண்டும் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

This image has an empty alt attribute; its file name is 1-166-904x1024.jpg

இப்படி ஒரு நிலையில் அண்ணாத்த’ படம் நிச்சயம் என்னுடைய கடைசி சினிமாவாக இருக்கக்கூடாது. நான் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன். என் வயதுக்கேற்றவகையிலான கதாபாத்திரங்களில் நிச்சயம் தொடர்ந்து நடிப்பேன் என்று கண் கலங்கி கூறி இருக்கிறாராம். அண்ணத்த படத்தை தொடர்ந்து ரஜினி வேறு எந்த படத்திலும் இதுவரை கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement