‘என்னது மசாஜ் செண்டரா’ – மீண்டும் சர்ச்சையை கதையை கையில் எடுத்திருக்கும் மோகன்.

0
348
bakasuran
- Advertisement -

மீண்டும் சர்ச்சை கதையை இயக்குனர் மோகன் ஜி கையில் எடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும், இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படம் குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

- Advertisement -

மோகன் திரைப்பயணம்:

இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி சந்தித்து இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமில்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், இவருடைய அடுத்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக நடிப்பாரா? இல்லையா? என்று பல எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மோகன்ஜி தனது அடுத்த படம் குறித்து அறிவித்து இருந்தார்.

செல்வராகவன் திரைப்பயணம்:

அந்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவுலகில் இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் ‘சாணிக் காயிதம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக செல்வராகவன் அறிமுகமானார். பின் இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்த பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

செல்வராகவன்-மோகன் கூட்டணி:

தற்போது செல்வராகவன்-மோகன் கூட்டணியில் பகாசூரன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நட்டி நடராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி இருந்தது. சிவ சிவாயம் என்ற பாடலை சாம் சிஎஸ் தான் இசை அமைத்து இருக்கிறார். இந்த பாடலின் கிளிம்ப்ச் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.

bakasuran

படத்தின் கதை:

இந்நிலையில் பகாசூரன் படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் மோகன்ஜி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், பகாசூரன் படம் ஒரு மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் பெண்கள் எப்படி உள்ளே வருகிறார்கள். அதற்குள் நடக்கும் பிரச்சனை என்ன? என்பதை காட்டும் விதமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இவர் படத்தின் ஓன்லைன் கதையை கூறிய பிறகு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Advertisement