சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக சங்கர்– கணேஷ் இரட்டையர்களும் ஆவார். இந்திய திரை இசை உலகில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் பிறகு மக்களால் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டவர்கள் சங்கர் கணேஷ். விஸ்வநாதன்– ராமமூர்த்தி இசை அமைப்பாளர்களுக்கு பிறகு சங்கர் கணேஷ் எனும் இரட்டையர்களை யாராலும் மறக்க முடியாது. இவர்கள் சினிமாவுலகில் ஆரம்பத்தில் இசையமைத்த பாடல்களை அனைவரும் கேட்டாலும் இவர்கள் தான் என்று பல பேருக்கு தெரியாது இருந்தது. பின் நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் தான் என்று மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார்கள். மேலும், இவர்கள் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் இசை இயக்குனர், பாடகர் என பல துறைகளில் இருவரும் சேர்ந்து பணியாற்றி உள்ளார்கள். இவர்களுடைய பாடல் எல்லாம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிறமொழி மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள். மேலும், இவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பணிபுரிந்து உள்ளார்கள்.கணேஷ் அவர்கள் எப்போதும் கழுத்தில் செயின்னும், கையில் மோதிரம் என நகை கடை அண்ணாச்சி போல நகைகளைப் போட்டுக் கொண்டு தான் இருப்பார்.நிகழ்ச்சிக்கு தான் இப்படி போகிறார் என்று பார்த்தால் படத்திற்கு இசையமைப்பதுனாலும் இவர் நகைகளைப் போட்டுக் கொண்டு செல்வாராம்.
இது குறித்து பல பேர் பல விமர்சனங்களையும், கருத்துக்களையும் கேட்டிருந்தார்கள். ஆனாலும், இதற்கு பதில் தெரியாமல் இருந்தது. தற்போது இது குறித்து அவருடைய மகன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அது என்னவென்றால், என் அப்பா சினிமா உலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் ஒருவரிடம் இந்த செயின் என்ன விலை என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நீ எல்லாம் இந்த செயினை தொட்டு பார்க்க கூட தகுதி இல்லாதவர். அதை வாங்க நினைக்கக் கூட உன்னால் முடியாது.
மேலும், நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி நகைகளை வாங்கி போட முடியாது. அதுமட்டும் இல்லாமல் உன் வாழ்க்கையில் தங்க நகையை தொட்டுப் பார்க்க முடியாது, வாங்குவது எங்கே?? அந்த அளவிற்கு உனக்கு தகுதி எல்லாம் கிடையாது என்று அவதூறாக பேசி அவமானப்படுத்தி இருக்கிறார். அந்த வார்த்தை அவருடைய மனதை மிகவும் துன்புறுத்தியது. எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி அவர்களிடத்தில் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் உழைத்தார். அதற்குப் பிறகு தான் என் தந்தை சம்பாதித்து நிறைய தங்க நகைகளை வாங்கினார். அதை எல்லாம் எங்கு போனாலும் போட்டுக் கொண்டார் செல்வார் என்று கூறினார்.