சூப்பர் ஸ்டார் பேரன் செய்த அட்டகாசம். சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்..

0
6673
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் இவருடைய ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். அதனாலேயே தான் இன்று வரை சூப்பர் ஸ்டாராக விளங்கிவருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் திரை அரங்கிற்குவெளிவந்த படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ரஜினி நயன்தாரா அவர்கள் நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் வெளியாகி பட்டைய கிளப்பியது. இந்நிலையில் நடிகர் ரஜினியின் பேரன் வீடு முழுக்க செய்த அட்டகாசம் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் — லதா ரஜினிகாந்த் தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் தனுஸை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகள்கள் உள்ளனர். தனுஷின் மூத்த மகன் தான் யாத்ரா. அப்படியே யாத்ரா ரஜினிகாந்த் போன்று உள்ளார். இளைய மகள் சௌந்தர்யா அவர்கள் முதலில் அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். தற்போது சௌந்தர்யா, விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சௌந்தர்யா மகன் தான் வேத்.

இதையும் பாருங்க : கடற்கரையில் படு கிளாமரான ஆடையில் டிக் டாக். ஷாக் கொடுத்த ரோஜா சீரியல் நடிகை.

வேத்தின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் வேத் வீடு முழுக்க பவுடரை கொட்டி அமர்க்களம் செய்திருக்கிறார். அந்தப் பவுடரில் அவர் ஏபிசிடி எழுதி உள்ளார். இதனை அவரது தாய் சௌந்தர்யா அவர்கள் பவுடர் பன் என்ற ஹாஸ்டேக்கை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த போட்டோ தான் இப்போது சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பது, “தாத்தாவின் ரத்தம் அப்படித் தான் இருக்கும்” என்றும், “சூப்பர் ஸ்டார் பேரன் ஆச்சே” என்றும் பலர் கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
View this post on Instagram

‪A B C D F E ??❤️??? #VedCutie #PowderFun ‬

A post shared by Soundarya Rajinikanth (@soundaryaarajinikant) on

மேலும், தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement