அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட போக முடியலை, அஸ்தியை கூட கரைக்க முடியல – நடிகை ரூபினி ஆதங்கம்

0
57387
roopini
- Advertisement -

ஒட்டுமொத்த உலகத்தையும் இந்த கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 1684 பேர் பாதிக்கப்பட்டும், 38 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-
Roopini

- Advertisement -

இந்தியாவிலேயே கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது மகாராஷ்டிரா தான். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கு காரணம் அங்கு உள்ள மக்கள் வெளியிடங்களில் நடமாடுவதுதான்.

இதையும் பாருங்க : முதல்வன் படத்திற்கும் மங்காத்தாவில் வந்த ‘சரோஜா’ பாடலுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா.

அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியிடங்களில் நடமாடுவது அதிகரித்திருக்கிறது. இதை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் வசித்து வரும் நடிகை ரூபினி தனது நெருங்கிய உறவினர் இறந்ததற்கு கூட செல்ல முடியாமல் வீட்டில் தவித்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியது,

-விளம்பரம்-
Actress Rupini

தூங்கா நகரம் என்று பெயர் பெற்றது மும்பை. மும்பையில் இரவு நேரங்களில் கூட பல இடங்களில் பரபரப்பாகவே வியாபாரம் நடந்து கொண்டு இருக்கும். ஏழைகள் முதல் பணக்காரர் வரை எல்லா தரப்பு மக்களும் மும்பையில் தான் வசித்து வருகிறார்கள். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மும்பை நகரத்தை தற்போது அமைதியான சூழலில் பார்ப்பதற்கு கொஞ்சம் வேதனையாக இருக்கிறது.

அதனால் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த பொருளாதாரத்தை கூடுதலாக சம்பாதித்து கூட்டிக்கலாம். ஆனால், உயிரிழப்புகள் ஏற்பட்டால் மீட்கவே முடியாது. அதனால் மக்கள் இந்த தருணத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. மும்பையில் தான் என்னுடைய பெரியப்பா வசித்து வருந்தார். சில தினங்களுக்கு முன்பு தான் அவர் இறந்து விட்டார்.

Actress Rupini

மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவருடைய சொந்த மகளும் கூட அவருக்கு அஞ்சலி செலுத்த போக முடியலை. இந்த வேதனையால் சில தினங்களாகவே என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரண்டு வாரமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தனிமையில் இருக்கிறோம். இந்த நிலைமை சீக்கிரமே சரியாக வேண்டுமென்று நினைக்கிறோம் என்று கூறினார்.

இதையும் பாருங்க : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் பயணம். தனி வீட்டில் அடைக்கப்பட்ட தீனா ஆதிகேசவன் மகன்.

தென்னிந்திய சினிமா உலகில் 80களில் பிஸியான நடிகையாக இருந்தவர் நடிகை ரூபிணி. இவருடைய உண்மையான பெயர் கோமல் மதுவாக்கார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தியவர்.

Advertisement