இப்படத்தின் இசையைமைபாளராக அனிருத் கமிட் ஆகியுள்ளார், ரஜினி நடித்த 2.0 படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ நிறைவைடந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த படத்தில் நடிகை சிம்ரன்,த்ரிஷா ஆகியோரும் கமிட் ஆகியுள்ளனர். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் "ஜோக்கர்" படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் குரு சோமசுந்தரமும் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் குரு சோமசுந்தரம், தமிழில் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய "ஜிகிர்ந்தண்டா " படத்தில் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடதக்கது. தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இவருக்கு ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.




