பல லட்சம் செலவில் மீட்டிங், பிரபலங்கள் வருகை – ரஜினியின் தலைமையில் நடைபெற இருந்த விழா ரத்தானது ஏன் ?

0
336
rajini
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தை புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தற்போது ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

மனிதம் காத்து வாழ்வோம் நிகழ்ச்சி :

இந்நிலையில் தான் பல லட்சம் ரூபாய் செலவில் ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் “மனிதம் காத்து மகிழ்வோம்” என்ற தலைப்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு பலவிதமான ஏற்பாடுகள் நடைபெற்றது. மேலும் வரும் மார்ச் 26ஆம் தேதி இந்த விழாவை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த சோளிங்கர் ரவி திட்டமிட்டிருந்தார். அதோடு இந்த விழாவின் மூலம் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ரஜினிகாந்திடம் அனுமதியும் பெற்றுள்ளனர்.

நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி :

இந்த விழாவிற்காக நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், லாரன்ஸ் உள்ளிட்டோர் இந்த விழாவிற்கு ப்ரோமோஷன் செய்யும் வகையில் தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டனர். ஆனால் திடீரென இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று ரஜினிகாந்த் தரப்பில் இருந்து சொன்னதை அடித்து அதிரடியாக விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

-விளம்பரம்-

இதுதான் காரணமா :

இந்த நிலையில் “மனிதம் காத்து மகிழ்வோம்” நிகழ்ச்சி நின்றது குறித்து வெளியான தகவலில் “ரஜினிகாந்த்திடம் ஒப்புதல் வாங்கித்தான் இந்த நிகழ்ச்சி நடக்க இருந்தது, ஆனால் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் வருகிறார்கள் என்று மற்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு சென்றிருக்கிறது. இந்த தகவல் ரஜினிகாந்த்திற்கு சில காலம் கழித்துதான் தெரிந்திருக்கிறது. இதனால் நிகழ்ச்சி வேண்டாம் என்றும் அதே சமயத்தில் நலத்திட்ட உதவிகள் சரியாக செல்லவேண்டும் என்றும் ரஜினிகாந்த் உத்தரவிட்டிருப்பதாக மன்ற நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.

அரசியல் காரணமாக இருக்கக்கூடும் :

இந்நிலையில் மற்றொரு தகவலும் ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது “ரஜினிகாந்த் முன்பே அரசியல் வேண்டும் என்று விலகியதால், அவர் தங்களுக்கு ஆதரவாக பேசமாட்டாரா? என்ற எண்ணம் சிலருக்கு இருப்பதாகவும். இப்படி சூழ்நிலை இருக்கும் போது வரும் 26ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஏ.சி.சண்முகம், திருநாவுக்கரசர், ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் வருவதக தகவல் கிடைத்திருக்கிறது.

மேலும் அடுத்த மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்க இருப்பதினால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மீண்டும் அரசியல் வருகை குறித்து பேசுவதற்கான இடமாக இது மாறக்கூடும் என்பதினால் மட்டுமே இந்த நிகழ்ச்சியை ரஜினிகாந்த் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement