வெளியியானது ரஜினி 167 படத்தின் புதிய தகவல்.! மீண்டும் இவருடனா?

0
846
rajini-167
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 பிரம்மாண்ட படத்திற்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார். பேட்ட திரைப்படம் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்கு பொடியாக வரும் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி 166 படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்தப்படம் ரஜினியின் அரசியல் வரவை மையப்படுத்தி உருவாக உள்ளதாகவும், அப்படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால்,அதனை முருகதாஸ் மறுத்திருந்தார்.

இதையும் படியுங்க : முருகதாஸ் இயக்கும் ரஜினி 166 படத்தின் கதாநாயகி இவரா..! 

- Advertisement -

தற்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருவதால் அவர் சென்னை திரும்பியதும் அடுத்தப்படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி ரஜினிகாந்த் வரும் 8ம் தேதி சென்னை திரும்புகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் – ஏ.ஆர் முருகதாஸ் இணையும் புதுப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முருகதாஸுடன் படத்தை முடித்துவிட்டு
தன்னுடைய 167வது படத்துக்காக கார்த்திக் சுப்புராஜூடன் இரண்டாவது முறையாக கைக்கோர்க்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே இயக்குநர் ரஞ்சித்துடன் அடுத்தடுத்து ரஜினிகாந்த் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement